Tuesday, 2 August 2016

தூதுவளை


தூதுவளை
தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன் வேரும் இலையும் கைப்பு (கசப்பு), கார்ப்பு சுவையுடையது. தூதுவளையை சமைத்துச் சாப்பிட கபத்தால் உண்டாகும் காதுமந்தம், காதெழுச்சி, காசம், நமைச்சல், அக்னி மாந்தம், தேக உட்குத்தல், ஆகியவை நீங்கும்.
தூதுவளைப் பூவை நெய்யில வதக்கி தயிருடன் சாப்பிட அறிவு விருத்தியாகும். தூதுவளை இலையைத் துவையல் செய்து சாப்பிட மாந்தம், தாது நஷ்டம், இளைப்பு இவைகள் போகும். பருப்புடன் சேர்த்து இதைக் குழம்பு வைத்துச் சாப்பிட மகோதரம் (பெருவயிற்றுநோய்), இவை குணமாகும். தூதுவளை இலைச் சாற்றை காதில் பிழிய காதடைப்பு, காதெழுச்சி முதலிய நோய்கள் குணமாகும்.
தூதுவளை காயின் வற்றலைக் குழம்பு செய்து சாப்பிட கப ரோகம், பித்த வாதம், இவைகளைக் கண்டிக்கும். தூதுவளையின் பழம் மார்ச்சளி, மார்பு வலி, பாம்பு விஷம், இவைகளைப் போக்கும்

No comments:

Post a Comment