Monday, 24 October 2016

செவ்வாழை

செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு.

எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.

செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.

நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.

நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பற்களும், ஈறுகளும் பலம்.

கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும்காய்ச்சலைப் 
போக்கும்வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்
கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு 
பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லதுஇதனால் பற்களும்ஈறுகளும் 
பலப்படும்.

Wednesday, 19 October 2016

சுகப்பிரசவம்

                   பெண்கள் கருவுற்றது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். அதற்கு காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள பொருட்களை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் ஊட்டச் சத்துள்ள உணவை உட்கொண்டால்தான் குழந்தை ஆரோக்கியமுடன் வளரும். 
                   அத்துடன் சுகப்பிரசவத்துக்கும், குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரப்ப தற்கும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. கர்ப்பிணிகள் இதுபோன்ற சத்துள்ள உணவுப்பொருட்களை கூடுதலாக எடுத்துக் கொண்டால் அவர்களது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன், கருவில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். 
                   அதே நேரம் உடல் எடையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். 10 கிலோவுக்கு மேல் எடை கூடினால் அதுவும் ஆபத்தானது. பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படும். குறிப்பாக, உடல் பருமனான கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோல், நெய், வெண்ணெய், பாலா டை, ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய், இறைச்சி, வனஸ்பதி ஆகிய கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. 
                        குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொண்டு அவர்களது ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்து கொள்வது நல்லது. இதன்மூலம் சுகப் பிரசவம் ஏற்படுவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சுகப் பிரசவம்


                   பெண்கள் கருவுற்றது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். அதற்கு காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள பொருட்களை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் ஊட்டச் சத்துள்ள உணவை உட்கொண்டால்தான் குழந்தை ஆரோக்கியமுடன் வளரும். 
                   அத்துடன் சுகப்பிரசவத்துக்கும், குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரப்ப தற்கும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. கர்ப்பிணிகள் இதுபோன்ற சத்துள்ள உணவுப்பொருட்களை கூடுதலாக எடுத்துக் கொண்டால் அவர்களது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன், கருவில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். 
                   அதே நேரம் உடல் எடையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். 10 கிலோவுக்கு மேல் எடை கூடினால் அதுவும் ஆபத்தானது. பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படும். குறிப்பாக, உடல் பருமனான கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோல், நெய், வெண்ணெய், பாலா டை, ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய், இறைச்சி, வனஸ்பதி ஆகிய கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. 
                        குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொண்டு அவர்களது ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்து கொள்வது நல்லது. இதன்மூலம் சுகப்பிரசவம் ஏற்படுவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு



மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள். காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும்.

இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்புத் தள்ளிப் போகிறது.
குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாள்கள் என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு கொள்ளும்போது வெளியேறிய விந்து பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும். அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற வாய்ப்பு வரும். அதனால், 11, 12, 13 ஆகிய நாள்களும் விலக்கப்பட வேண்டும். 

மூல நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள்

மூல நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள் 
 இரத்தமூலத்திற்கு பசும்பால் கறந்தவுடன் மேலிருக்கும் நுரையை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து காலைமாலை இருவேளை பருகினால் 3லிருந்து 7 நாட்களுக்குள் இரத்தப் போக்கு நிற்கும்.
 நீண்ட நாள் இரத்த மூலத்திற்கு தயிரில் வெங்காயத்தை ஊறவைத்து தினம் இருவேளை சாப்பிட்டால் நல்லது.
 எல்லா வகையான மூலத்திற்கும் தொட்டால் சிணுங்கிசெடிஇலைதண்டுவேர் இவைகளை கசாயமாக செய்து அருந்தலாம். வலிவீக்கம் குறையும்.
 எல்லா வகையான மூலத்திற்கும் கிரந்தநாயகம் இலையை பருப்புடன் சேர்த்து கூட்டுசெய்து சாப்பிட்டால் வலிவீக்கம் இரத்தப்போக்கு தணியும்.
 வெங்காய சாறுடன் நெய் அல்லது நாட்டுசர்க்கரை கலந்து பருகினால் விரைவில் குணம் பெறலாம்.
 கொதிக்கும் நீரில் மாதுளம்பழ விதை சிலவற்றை போட்டு சிறிது நேரத்தில் இறக்கி தேநீர் போல் அருந்திவர விரைவில் குணம் பெறலாம்.
 மூலம் வலி நீங்க சிறிதளவு பாலில் வாழைப்பழம் சேர்த்து கடைந்து ஜாம் போல் செய்து சாப்பிட்டு வர வலி நீங்கும்.
 பாகற்காய் இலையை சாறெடுத்து மோருடன் கலந்து காலைமாலைபருகிவர நல்ல பலன் கிடைக்கும்.
 வலியுள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து பூசலாம்.
 மாங்கொட்டையிலிருக்கும் விதையை பவுடராக்கி இரண்டு ஸ்பூன் வீதம் தினம்இருவேளைதேன் கலந்து சாப்பிடலாம்

Sunday, 9 October 2016

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் உடலில் இருந்து நீக்கலாம்.

தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும்.

பல் வலி -10 minutes

பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். 

Thursday, 6 October 2016

முள்ளங்கியைச் சமைக்கலாமா?


முள்ளங்கிக் கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் வைட்டமின்களும், தாது உப்புகளும் அழிந்துவிடுவதுடன் நோய் எதிர்ப்பு பாக்டீரியாக்களும் கூடவே சிதைந்துபோய் விடுகின்றன.
எனவே, பச்சையான முள்ளங்கிக்துண்டுகளுடன் காரட், பீட்ரூட் துண்டுகளையும் கலந்து, அவற்றில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, உப்பு சேர்த்து, சாலட் போல் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியம் கிடைக்கும்.

கர்ப்பம் தரிக்காமல் இருக்க….


ஆயுர்வேத மருத்துவத்தில் கெடுதல் விளைவிக்காத குடும்பக்கட்டுபாட்டு மருந்தாகப் புதினாப்பொடி திகழ்கிறது. கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தாம்பத்தய உறவுக்கு முன்னால், ஒரு தேக்கரண்டிப் பொடியை வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போதும்.
மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.

ஆஸ்துமா குணமாக

ஆஸ்துமா குணமாகப் புதினாக் கீரை போதும்!
மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும் பின் வருமாறு உட்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும். இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் வந்து தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமாகாரர்கள் ‘கர்புர்’ ரென்று மூச்சுவிடச் சிரமப்படாமல் நிம்மதியாய் இரவில் தூங்கலாம்.

வெள்ளைப்படுதல்



வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

இரத்த மூலம்



மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

பச்சை உருளைக்கிழங்கு / இரைப்பைக் கோளறுகள் குணமடையும்.



வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும்.

கோவைக்காய்

கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.
பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

மலச்சிக்கல்

 வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

பச்சை வெங்காயம்

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

 வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

Sunday, 2 October 2016

கொய்யாப்பழம் - அடங்கியுள்ள மருத்துவகுணம்



வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் 
கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளனகால்சியம்பாஸ்பரஸ்இரும்பு போன்ற தாது 
உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும்மற்றும்
குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவைமலச்சிக்கல் போக்கும்கசாயம் 
வாந்தியினை தடுக்கும்ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி 
கொப்பளிக்கலாம்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் 
இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் 
புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் 
கட்டுப்படுத்தும்.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் 
அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் 
உதவுகின்றன.

கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும்காய்ச்சலைப் 
போக்கும்வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்
கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு 
பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லதுஇதனால் பற்களும்ஈறுகளும் 
பலப்படும்.

வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து 
இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறதுஅதனால் வளரும் குழந்தைகளுக்கு 
கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்உடல் நன்கு வளரவும்எலும்புகள் பலம் 
பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளனஇதனால் தோலை நீக்கி 
சாப்பிடக்கூடாதுமுகத்திற்கு பொலிவையும்அழகையும் தருகிறதுதோல் 
வறட்சியை நீக்குகிறதுமுதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராகமாற்றுகிறது.

மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட 
நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம்இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது
அருந்தும் ஆசைவெறி எல்லாம் தூள் தூளாகி விடும்மிக எளிதில் மது போதை 
பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து 
தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும்
கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்லசாப்பிட்ட 
பின்போஅல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போசாப்பிட நல்லது.

நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை 
சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்இருமல் இருக்கும் போது இப்பழத்தை 
சாப்பிட்டால் அதிகமாகும்தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை 
உண்டால் நோய் அதிகரிக்கும்.

கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டுஒரு சிலருக்கு 
மயக்கத்தை ஏற்படுத்தும்வாதநோய்ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள்இப்பழத்தை
சாப்பிடக்கூடாது.

கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாதுசாப்பிட்டால் வயிறு வலி 
உண்டாகும்கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும்அளவிற்கதிகமாகசாப்பிட்டால் 
பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.