Sunday, 31 July 2016

கண் பார்வை மங்கலாக இருந்தால்


கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!
கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.
பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.
கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.
இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.
கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

Wednesday, 27 July 2016

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.

ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?

கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல. அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உதவியோட இந்த `வெல்லம் நெல்லிக்காய்' ரெசிப்பியை உருவாக்கி பல வருசங்களா தினமும் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுட்டு வர்றோம்.

சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.

அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும்

நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்புறம், மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் இறங்கியிருக்கிறதால அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே 

பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் ...


பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு.
நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பைசுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.
ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசிகாதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக நம்தவறான வாழ்க்கை முறையினால் எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.
பித்தப்பையில் கற்கள் (Gallstones)
அதிகபடியான மாத்திரைகளை உட்கொள்பவர்கள், கொழுப்புவகை உணவுகளை அதிகம் உண்பவர்கள், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு மிக மிக அதிகம் . மேலும் , இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள், செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவுமண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள் ,குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன.
தலைவலி, வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல்,வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாயுத் தொல்லை மற்றும் செரிமானத்தில் கோளாறு போன்ற பித்தப்பையில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்.
அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரண கோளறு, அல்சர் மஞ்சள் காமாலை நோய் போன்ற பல வியாதிகள் வரும்.
பித்தப்பை கல் இருப்பது உறுதியானால்
1. அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும்.
2. வறுத்த மற்றும் அதிக கொழுப்பன உணவு வகைகளை உண்ணக் கூடாது.
3. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
4. ஃப்ரிட்ஜில் வைத்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
5. ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுதலை தவிர்க்கவேண்டும் ,
6. பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும்.
7. மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.
உணவில் அதிகமான பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.
பித்தப்பை கல் நீங்க
1. இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.
2. எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.
3. ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.
1. வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம்,
2. கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.
வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம்.
3. உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.
 

நீரழிவின் வகைகள்....முதலுதவி சிகிச்சை.

நீரழிவு என்றால் என்ன?

உலகில் உள்ள மக்களில் பெரியவர் முதல் சிறியவர் வரை அதிகமானவர்களை பாதிக்கும் ஒரு வியாதி என்றால் அது Sugar என்று சொல்லகூடிய நீரழிவு நோய். இந்நோயை சர்க்கரை நோய் மற்றும் மதுமேகம் என்றும் கூறுவார்கள்.

நீரழிவு நோய் நம் உடலில் உருவாக காரணம் என்னவெனில், நமது உடல், இரத்தத்திலுள்ள குளுக்கோஸை ஆற்றலுக்காகப் பயன்படுத்துகின்றன, இரத்த குளுக்கோஸை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றக்கூடிய வேலையை இன்சுலின் என்னும் சுரப்பி செய்கிறது. இந்த இன்சுலின் சரியாக சுரக்காமல் போகும் பொழுது நமது உடலால் இரத்த குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற முடியாமல் போகிறது இந்த நிலையை நீரழிவு என்று கூறலாம்.

நீரழிவின் வகைகள்....

டைப் 1 நீரழிவு நோய் [Type 1 Sugar] இது நமது உடலில் இன்சுலின் சுரப்பி மொத்தமாக சுரக்காத நிலை, டைப் 2 நீரழிவு நோய் [Type 2 Sugar] இது இன்சுலின் கம்மியாக சுரக்கும் நிலை.
உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்பட்ட இரத்த குளுக்கோஸ் தவிர உடலில் தங்கும் குளுக்கோஸ் கழிவாக வெளி ஏறாமல் உடலில் தங்கினால் ஹை சுகர் [High Sugar] என்றும் தேவைக்கு குறைவாக இரத்த குளுக்கோஸ் கிடைத்தால் அது லோ சுகர் [Low Sugar] என்றும் அழைக்கப்படுகிறது.

இது நீரழிவு நோயை பற்றி நாம் எளிமையாக தெரிந்து கொள்ள கூடிய விஷயம்.

இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகமாக அல்லது குறைவாக இருப்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?

திடீரென்று மயக்கம் ஏற்பட்டால் அதுவும் உணவு உண்ணும் நேரம் சிறிது தாமதம் ஆகும்போது ஏற்படும் தலைசுற்றுடன் கூடிய மயக்கம்.
ஒரு நாளில் அதிகமாக சிறுநீர் கழித்தல் குறிப்பாக இரவு நேரங்களில்.
வழக்கத்தைவிட அதிகமாக தாகம் எடுத்தல்.
களைப்பாக உணர்தல்.
உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைதல்.
வெட்டுக் காயங்கள் மற்றும் புண்கள் ஆறுவதற்கு அதிக நாட்களாகும் போது.

நோயை உணர்ந்த பின் என்ன செய்ய வேண்டும்.

நீரிழிவைக் குணப்படுத்த முடியாது, ஆனால் அதை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க என்ன செய்ய வேண்டும் அன்று பார்போம்.

உங்கள் உணவில் நீங்கள் மாற்றங்களைச் செய்வதுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்யுங்கள், அதாவது நடைபயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஜாக்கிங் இவற்றில் உங்களுக்கு முடிந்த பயிற்சியை செய்யவும், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யலாம்.
நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவை ஒரே சமயத்தில் சாப்பிடாமல் 2 மணி நேரம் இடைவெளி விட்டு பிரித்து உண்ணவேண்டும்.
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கறிகள், பழம், சர்க்கரை சேர்க்காத பழச்சாறு, பருப்பு மற்றும் பயிறு ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள்.
வாழைத்தண்டு அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சிறு குறிஞ்சாங் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும் இதனை வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு மோர் அருந்த நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நடுக்கம் தீரும்.
அசைவ பிரியர்கள் மீனை தாராளமாக உண்ணலாம் [எண்ணெயில் பொறித்த மீனை தவிர்க்கவும்] கொழுப்பு நீக்கிய இறைச்சியைக் குறைவாக சாப்பிடவும் (தவிர்ப்பது நல்லது).
தாவர மற்றும் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு உபயோகியுங்கள், ஆனால் அதையும் குறைவாகவே பயன்படுத்துங்கள்.
பிஸ்கெட்டு, சாக்லேட், எண்ணெயில் பொறித்த மொறுமொறுப்பான பண்டங்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள சிற்றுண்டிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
பால் உபயோகிக்கும் போது கொழுப்பு நீக்கிய அல்லது பாதியளவு கொழுப்பு நீக்கிய பாலைப் பயன்படுத்துங்கள்.
செயற்கைப் பானங்கள், மில்க் ஷேக்குகள் மற்றும் சர்க்கரை சேர்த்த பானங்களுக்கு பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.
கார்போஹைட்ரேட்டு நிறைந்த உணவை சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையும் தவிர்க்கவும்.
வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காதிர்கள் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஓரே இடத்தில் அமர வேண்டாம். கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும் [முடியாத பட்சத்தில் இறங்கும்போது தவிர்க்கவும்].
சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடும் இவர்களை எளிதில் பிற நோய் தாக்கும், எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
அதிக உடல் எடை இருந்தால், அதைக் குறைக்க வேண்டும் அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
உங்களுக்கு புகை, மது மற்றும் போதை பழக்கம் இருந்தால் நிறுத்திவிடுங்கள்.

நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய இயற்கை மருந்துகள்...

மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நாவல்பழக் கொட்டை :

நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாந்தளிர் பொடி :

மாமரத்தின் தளிர் இலைகளை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு. அந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் காலையில் அருந்தி வந்தால் நீரழிவு நோய் குறையும்.

வேப்பம்பூ பொடி :

வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை கலந்து வைத்து கொள்ள வேண்டும் அந்த கலவையை தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

இசங்கு வேர் :

இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை :

நீரழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மிகவும் நல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அந்த வெந்தயம் மற்றும் நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்கலாம்.

அவரைக்காய் :

பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

பாதாம் பருப்பு :

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகும்.

ஆவாரம்பூ :

ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தலாம் அல்லது காலையில் 5 ஆவாரம்பூவை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம் அல்லது ஆவாரம்பூவை காயவைத்து பொடி பண்ணி சுடு நீரில் கலந்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

தினம் டீ குடிப்பதற்கு பதில் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய் சேர்த்து டீ போல் அருந்தலாம் [பால் சேர்க்க கூடாது டீ வாசனை வேண்டும் என்றால் சிறிது டீ தூள் சேர்த்து கொள்ளலாம்].

கோவைக் காய் மற்றும் பழம் :

கோவைக் காயை பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும், கோவைப் பழமும் நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு நல்லது.

கொய்யா பழம் :

இப்போதைய உணவுப் பொருட்களில் இரசாயனம் அதிகம் கலந்து இருப்பதால் உணவுக்குப் பின் ஒரு கொய்யா சாப்பிட்டால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளைப் பலப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த பழம்.

பாகற்காய் பொடி:

பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய ஒரு சில பொடிகள் சர்க்கரை நோய் குணப்படுத்தும் சக்தி உடையது, இவற்றை சுடு நீரில் கலந்து குடிக்கலாம், அவை

சிறியாநங்கை பொடி

கருஞ்சீரகப்பொடி

வெந்தய பொடி

மருந்தே வேண்டாம்....

உணவு கட்டுப்பாடு மிக அவசியம் அதாவது கண் பார்த்த உணவை எல்லாம் உண்ண ஆசை படக் கூடாது மேலும் உடற்பயிற்சி மிக முக்கியம்.

வெண் சர்க்கரையை (சீனியை) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

இந்த கட்டுரை மூலம் நீரழிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி, நீரழிவு நோய் பற்றிய பயம் மற்றும் நீரழிவு இல்லாத வாழ்க்கையை இதை படித்தவர்கள் பெற வேண்டும் என்பது எனது நோக்கம்.

எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முக்கியமான முதலுதவி 
சிகிச்சை.

ஜப்பானிய நீர் சிகிச்சை




தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்றபானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.

தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

🏾இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

தலைவலி
இரத்த அழுத்தம்
சோகை
கீல்வாதம்
பொதுவான பக்கவாதம்
ஊளைச்சதை
மூட்டுவலி
காதில் இரைச்சல்
இருதயப் படபடப்பு
மயக்கம்
இருமல்
ஆஸ்த்மா
சளி
காசநோய்
மூளைக் காய்ச்சல்
கல்லீரல் நோய்கள்
சிறுநீரகக் கோளாறுகள்
பித்தக் கோளாறுகள்
வாயுக் கோளாறுகள்
வயிற்றுப் பொருமல்
இரத்தக் கடுப்பு
மூலம்
மலச்சிக்கல்
உதிரப்போக்கு
நீரழிவு
கண் நோய்கள்
கண் சிவப்பு
ஒழுங்கில்லாத மாதவிடாய்
வெள்ளை படுதல்
கர்ப்பப்பை புற்றுநோய்
மார்புப் புற்றுநோய்
தொண்டை சம்பந்தமான நோய்கள்

நம்பவே முடியவில்லையே! சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைபிடிக்கப்படுகிறது.

🔬சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

மலச்சிக்கல் - ஒரே நாளில்
வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
புற்று நோய் - ஆறு மாதங்கள்
காசநோய் - மூன்று மாதங்கள்
 

ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க வல்ல


A + B + C: ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், ஒரு காரட், மூன்றையும் எடுத்து நன்கு கழுவித் துடைத்து
தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும். விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

இந்த பானம் அருந்துவதால் பயன்கள்:

புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க வல்லதாம் இந்த ஜூஸ்.

ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களைத் தடுக்கிறது.

மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது.

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது.

பார்வைக் குறைபாடுகளை நீக்குகின்றது மலச்சிக்கல் பிரச்சினைகளுக்குத் தீர்வு.

உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல பலன் உண்டு.

கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள். அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும்.


இது நோய் தீர்க்கும் மருந்தல்ல...

நமது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் வாரக்கணக்கில் சும்மா இருக்கும் ஐஸ் கட்டியை எடுத்து, நமது தலையும், கழுத்தும் இணையும் அந்த இடத்தில் ஒரு 20 நிமிடங்கள் வைத்துக் கொள்ளுங்கள்...
*
இது "பெங்க் ப்பூ" என்ற சீன வழக்கம். தமிழிலில் இதனை "காற்று மண்டலம்" என்பார்கள்..
*
*
முதலில் ஓரிரு நிமிடங்கள் ரொம்பவும் "ஜில்"லென்று இருக்கும். சிறிது நேரத்திற்கு பிறகு அதுவே கதகதப்பாக மாறிவிடும்.
*
இந்த ஐஸ் கட்டி என்ன செய்யும்...???
*
*
இந்த ஐஸ் கட்டி நமது உடலுக்கு "எண்டார்பின்" என்ற ரசாயனத்தை தரும்.
*
இதனால் நமக்கு உற்சாகம், சந்தோசம், அமைதி கிடைக்கும்.
*
தூக்கமின்மை போய்விடும், ஜீரணம் சீராகும், அடிக்கடி சளித்தொல்லை இருக்காது, உடல் ரீதியான வலி, மூட்டு வலி, இதய நோய்கள் போய்விடும்.
*
முதுகுத்தண்டு பிரச்சனைகள் தீரும். தைராய்டு சுரப்பி குறைபாடு தீரும். ஆஸ்துமா நோய் தீரும்.
*
அதிக எடை குறையும், குறைந்த எடை கூடும்.
*
மன உளைச்சல், ஆழ் மனக்கவலை, அயர்ச்சி எல்லாம் பறந்துவிடும்.
*
*

*
உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, நோய்களை விரட்டும் அற்புத சக்தியை கொடுக்கும் எளிமையான பயிற்சி.

பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..!


பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..!

புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

உடல் எடையை குறைக்கும் வெள்ளரிக்காய் ஜுஸ்


உடல் எடையை குறைக்கும் வெள்ளரிக்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – 1
பச்சைமிளகாய் – பாதி
தயிர் – 1 கப்
பெருங்காயம் – சிறிது
மாங்காய் – 2 துண்டு
இஞ்சி – 1/2 இன்ச்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை

வெள்ளரிக்காய், இஞ்சி, மாங்காய் முதலியவற்றின் தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் வெள்ளரிக்காய், இஞ்சி, பச்சைமிளகாய், தயிர், பெருங்காயம், மாங்காய், உப்பு, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். வெள்ளரிக்காயில் விதைகள் இருந்தால் எடுத்து விடவும். அரைத்ததை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி கொத்தமல்லி தூவி பருகலாம். வெள்ளரிக்காயை சமைக்கும் போது அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடுகின்றன. ஆதலால் வெள்ளரிக்காயை கூடுமான வரை பச்சையாக சாப்பிடுவது நல்லது. வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது.


வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாக

.கோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்
2.சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை 1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும்
3.தவசுமுருங்கை இலைகளை மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
4.கொப்பரைத்தேங்காயை துருவல் அரை கோப்பையுடன் அரை தேக்கரண்டி கசகசா சேர்த்தரைத்து துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
5.திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்
6.1பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்
7.நெல்லிபட்டையை தூள் செய்து தேனில் குழைத்து வாய்ப்புண் மீது தடவ குணம் ஆகும்
8.மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
9.மணத்தக்காளியிலைகளை மென்று சாறை 1நாளைக்கு 6முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்
10.மருதாணிஇலைகளை 1மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க வாய்வேக்காடு,வாய்ப்புண்,தொண்டைப்புண் ஆறும்
11.மாதுளம்பூச்சூரணம் அரைதேக்கரண்டி, 250மிலி நீரில் காய்ச்சி வாய்கொப்புளிக்க வாய்ப்புண், தொண்டைரணம், வலி தீரும்.
12.அன்னபேதிச்செந்தூரம்200மிகி,,திரிபலாச்சூரணம்1-2கிராம்,5-10மிலி தேனில் குழைத்து தினமிருவேளை சாப்பிட வாய்ப்புண் ஆறும்.
13.நன்னாரி மணப்பாகு 5-10மிலி,தினமிருவேளை கொள்ள வாய்ப்புண்கள் ஆறும்
14.வெங்காரமது 3-5துளி வாய்ப்புண்களின்மீது தடவிவர குணமாகும்
15.மாசிக்காயை இழைத்து வாய்ப்புண்களின் மீது தடவ குணமாகும்.
16.அகத்திக்கீரையை கழுநீரில் வேகவைத்துக் குடிக்க வாய்ப்புண்கள் ஆறும்
17.வசம்பைச் சுட்டு சாம்பலாக்கி,தாய்ப்பாலில் உரைத்து நாவில் தடவ, நாத்தடுமாற்றம்,வாய்நீரொழுகல் குணமாகும். நன்கு பேச்சுண்டாகும்.
18.ஒதியம்பட்டைசூரணம் 1-2கிராம்,தினம்3வேளை,மோரில் உண்டு வர வாய்ப்புண்,குடற்புண்,பேதி,குருதிக்கழிச்சல் தீரும்.
19.பச்சைபயரை முளைகட்டி காலையில் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும்
20..ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய்துர்நாற்றம் நீங்கும்
21.சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்ப்புண் குணமாகும்
22.கொய்யாஇலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்ப்புண் குணமாகும்
23.தான்றி தளிரிலைச் சாற்றினை வெள்ளைத் துணியில் தடவியுலர்த்தி, நீரில் பிழிந்து,வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்
24.அகத்திக்கீரை கொழுந்தை வாய்கொண்டமட்டும் காலையில் மென்று தின்ன 3நாளில் வாய்வேக்காடு தீரும்
25.மருதாணி இலையை கியாழம்செய்து வாய் கொப்புளிக்க வாய் வேக்காடு நீங்கும்
26.மணித்தக்காளியிலையை சிறுபயர் போட்டு சமைத்துச்சாப்பிட வாய்வேக்காடு நீங்கும்
27.மல்லிகை இலையை வெற்றிலைபோல் மென்று துப்பிவர வாய்ப்புண் ஆறும்
28.அம்மான்பச்சரிசி இலையை சமைத்துண்ண வறட்சி அகலும். வாய்,நாக்கு, உதடுவெடிப்பு,ரணம் தீரும்.
29. ஆலம்பாலை காலைமாலை தடவிவர வாய்ரணம், உதடு, நாக்குவெடிப்பு, கைகால் வெடிப்பு, பல்ஆட்டம் தீரும். 30.ஒருபங்கு எலுமிச்சைசாறு,5பங்கு நீர் கலந்து வாய்கொப்புளிக்க வாய் வேக்காடு தீரும். 31.திருநீற்றுப்பச்சிலையை வெறும் வயிற்றில் வாய் கொண்டமட்டும் மென்று தின்ன வாய்வேக்காடு தீரும். 32.உணவுக்குமுன் எலுமிச்சம்பழசாறு பருக அஜீரணம்,வாய்வேக்காடு தீரும்

உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மூல முதற் காரணம்

வெங்காயம், பூண்டு, தேன் !!!

உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மூல முதற் காரணம் 
நம்முடைய இயற்கை விதி மீறல் செயல்களால்
, நம் செல்களுக்கு உள்ளும் , வெளியேயும் தேங்கும் கழிவுகளே நோய்களுக்கு மூல காரணம்

🌀 இந்த கழிவுகளை வெளியேற்ற

சின்ன வெங்காயம் 1
பூண்டு 1 பல் சாறு எடுத்து
1 டம்ளர் சுடு நீரில் கலந்து
1 ஸ்பூன் தேன் சேர்த்து
காலை மாலை அருந்தினால் செல்களுக்கு உள்ளே உள்ள கழிவுகளும் வெளியேறும்.

🌀 நம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மிக எளிய குறிப்பு
இரவு ஒரு மண் பாணையில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அடுப்பை அனைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி சீரகம் போட்டு மூடி விட வேண்டும்.
காலையில் அந்த தண்ணீரை உமிழ் நீருடன் கலந்து மெதுவாக குடித்து வரவும்.

உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் படிப் படியாக வெளியேறி விடும்.

செல்களில் இருந்து கழிவு வெளியேறினால்
அந்த செல் தன் வேலையை சரியாக செய்யும்
செல் சரியாக உள்ள போது, அதனால் உருவாக்கப்பட்ட திசு சரியாக இயங்கும்

திசு சரியாக இயங்கினால், அதனால் உருவாக்கப்பட்ட உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும்.

உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும் போது மனித உடலுக்கு எந்த நோயும் ஏற்படாது.

அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் சோற்று கற்றாழை...

1. சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு பெறும்.
2. சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.
3. சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் (ஸ்ட்ரெஸ்) தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.
4. சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.
5. 100கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்து கொண்டு அத்தோடு 10கிராம் ஊறவைத்த வெந்தயத்தையும் சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெயில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.
6. சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாக சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.
7. கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.
8. சோற்றுக் கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால்ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.
9.. சோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிச்சாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.
10. சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டு சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.
11. சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுனஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.
12. சோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்கு பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.
13. இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.
14. சோற்றுக் கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள் பேகொசைட்டோஸிஸ் மற்றும் ஆண்டிபாடீஸ் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது

பிரண்டைக் கொடி


பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. பிரண்டைகளில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல பிரிவுகள் உண்டு. முப்பிரண்டை கிடைப்பது அரிது. பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது.
இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். பிரண்டை, நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம். பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டுவந்தால் கப நோய்கள் நீங்கும்.
களிப்பிரண்டையை கணு நீக்கி மிளகு, உப்பு ஆகியவற்றைச்சேர்த்து உணவாகப் புசித்து வந்தால், பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும். பிரண்டையின் அடிவேரை நீர் விட்டு நன்றாக அலம்பி, அதை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு 10 குன்றி மணி எடை, சாப்பிட எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும். பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட சுவாச காசம் (ஆஸ்துமா) சாந்தப்படும்.
வேகவைத்த பிரண்டையை உப்பிட்ட மோரில் போட்டு உலர்த்தி வற்றலாகச் செய்வார்கள். பிரண்டையை நெய்விட்டு அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, தினமும் காலை, மாலை என்று இரு வேளையும் (எட்டு நாள்) சாப்பிட ஆசனத்தினவு, ரத்தமூலம் ஒழியும். பிரண்டையை இடித்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். இத்துடன் புளி, உப்பு சேர்த்துக் காய்ச்சுங்கள்.
குழம்பு பதத்தில் கெட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கிச் சூடு தாங்கும் அளவுக்குப் பற்று போடவேண்டும். இப்படிச் செய்தால் சுளுக்கு, சதை பிரளுதல், எலும்பு முறிவினால் ஏற்பட்ட வீக்கம் ஆகியவை குணமாகும். குணமாகும் வரை வைத்தியத்தைத் தொடருங்கள். பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. பிரண்டை ஆண்மை சக்தியைப் பெருக்கும்.
 

கருப்பட்டி ,உடம்புக்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா ?

 இன்றும் தென்மாவட்டங்களில் கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதை காண முடிந்தது. நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரம் பார்க்காமல் வளர்ந்த இந்த தலைமுறைக்கு பனை மரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்ககூடியது என்பது தெரியுமா ? கருப்பட்டி என்பதின் மருத்துவ குணங்கள் தெரியுமா ? ஒரு பனை மரம் சுனாமியையும் தாங்ககூடிய வலிமை உடையது என்பது தெரியுமா ? நமது தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் பனை ஓலையில் எழுதப்பட்டது என்பது தெரியுமா ? கருப்பட்டி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா ? ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.....
கிராமங்களில் எப்போதுமே கருப்பட்டி காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மை யின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்து கின்றனர்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டி யானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
ஓமத்தை கருப் பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.
சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது.
கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.
இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். கருப்பட்டியை நாள்தோறும் சர்க்கரைக்கு பதிலாக அனைவரும் பயன்படுத்தினால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

உடல் சூடு தணிந்து சம அளவை அடைய.....

சிலரது உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல தெரியும்
தண்ணி தினமும் 3- 4 லிட்டர் குடிங்க.
குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம். நார்மல் நீரே போதும்
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக், குடித்தால் உட‌ல் சூடு த‌ணியு‌ம்.
மெகந்தி தேய்த்து குளிப்பதனால் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டு உடல் சூட்டை தணித்து குளு குளுன்னு வைக்கும்
வெள்ளரியை அறுத்து கண்களில் வைங்க..
நிறைய ஃப்ரூட்ஸ் சாப்பிடுங்க..வாரத்திற்கு இரண்டு நாள் நல்லா நல்லெண்ணைய் தேய்த்து தலைக்கு குளிங்க.நிறைய மோர் குடிங்க.
வெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் சாப்பிடலாம்.
தினமும் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மாங்காய், மாம்பழம் சேர்க்க வேண்டாம்.
இளநீர் அதிகம் அருந்துங்கள்.
பாட்டில் பானங்கள் அருந்த வேண்டாம்
வாரத்தில் ஒரு நாள் வெந்தயக்களி சாப்பிடலாம்.
நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களை 2 தேக்கரண்டி அளவு பசு நெய் விட்டு வதக்கி, அதோடு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு, அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்......

உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக ....


வயிற்று கோளாறு, செரிமான பிரச்னைகள் போன்றவற்றை தீர்க்க கூடியதாக இந்த பானங்கள் உள்ளன. சுக்கு மல்லி பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்: சுக்கு பொடி, மல்லி விதைப்பொடி, நாட்டு சர்க்கரை, காய்ச்சிய பால். கால் ஸ்பூன் சுக்குப் பொடி, அரை மல்லி விதைப்பொடி, சிறிது நாட்டு சர்க்கரை சேர்க்கவும். இதில், ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
இதனுடன் சிறிது பால் சேர்த்து குடிக்கலாம். இது உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக உள்ளது. உடல் வலியை குறைக்கும். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். பல்வேறு நன்மைகளை கொண்ட தனியா, சிறுநீரை வெளியேற்றும். உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். காலையில் காபி, டீக்கு பதிலாக சுக்குமல்லி பானத்தை குடித்துவர செரிமான சக்தி அதிகரிக்கும். வயிற்று புண்கள் ஆறும். மலச்சிக்கல் இல்லாமல் போகும். அற்புதமான பானமாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் சுக்குமல்லி பானம் பயன்படுகிறது.
லவங்கம், மிளகு, சீரகத்தை பயன்படுத்தி கொழுப்பை குறைக்கும் பானம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: லவங்கப் பட்டை, லவங்கம், மிளகு, சீரகம், ஏலக்காய், பனங்கற்கண்டு. 5 முதல் 10 மிளகு, ஒரு துண்டு லவங்க பட்டை, ஒரு ஏலக்காய், 5 லவங்கம், கால் ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை லேசாக தட்டி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிப்பதால் உடல் எடை குறையும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
ரத்த அழுத்தத்தை தடுக்கும். மணத்தை தரக்கூடியதாக உள்ள இந்த பானம் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும். எலுமிச்சை புல்லை பயன்படுத்தி உடல் வலியை போக்கும் பானம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: எலுமிச்சை புல், இஞ்சி, தேன்.எலுமிச்சை புல்லை துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் இஞ்சியை தட்டி போடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், ரத்தம் சுத்தமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
 

பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம்


பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம். இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.
* உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.
* உங்கள் முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.
* செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.
* பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
 

இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு


ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு அருந்துங்கள்.
 

உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா?

அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.

உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா?

கீழே இருக்கும் அறிகுறிகளையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் – 4
2. எப்போதும் பசித்தல் – 2
3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது – 4
4. எப்போதும் களைப்பாக இருக்கும் – 2
5. ஆறாத புண் – 2
6. பிறப்புறுப்பில் இன்பெக்சன் – 3
7. உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல் – 2
8. காரணமில்லாமல் எடை குறைதல் – 2
9. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு – 2
10. மிகக் கூடுதல் எடை – 3
11. கால் மரத்துப் போய் உறுத்துதல் – 2
12. மங்கலான பார்வை – 2

நீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7-க்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவை கவனிக்காததால் ஏற்படும் விளைவுகள்

நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக,

1. பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.
2. சிறுநீரகங்கள் சேதமடையலாம்.
3. இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்.
4. காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.
5. உடலுறவில் இயலாமை ஏற்படலாம்.
6. மூளைச்சேதமும் ,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயின் சிகிச்சையில்

1. உணவுமுறை
2. உடற்பயிற்சி
3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்
4. இன்சுலின் பயன்படுத்துதல்

இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.

1. உணவு முறை

சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ-ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.

1. கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.

2. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.

3. சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.

4. கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

5. சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

6. மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?

நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.

நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்

உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.

மாற்று உணவு வகைகள் என்றால் என்ன?

ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை.ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.

1. காய்கறிகள்.
2. கார்போஹைட்ரேட்ஸ்.
3. பழங்கள்.
4. இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்.
5. பால் மற்றும் பால் தயாரிப்புகள்.
6. தானியங்கள்.
7. எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.

2. உடற்பயிற்சி

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்,

1. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
2. எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.

உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை

உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.

1. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்.
2. மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும்.
3. காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
4. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
5. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

3. மாத்திரைகள்

சில சமயங்களில் , இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும்.

சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது. மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய , இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

சில மாத்திரைகள் , செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.

4.இன்சுலின்

நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.

இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?

இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.

இன்சுலினின் வகைகள்

இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.

இன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப் படுகிறது. போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது?

1. முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.

2. உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ். நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.

3. இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.

4. தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.

5. ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.

6. இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.

7. தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

நினைவில் வைத்திருக்க வேண்டியவை

1. நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.

2. உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள்தான். மருத்துவரும்,மற்றவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.

3. நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக் கொண்டால்தான் நீரிழிவை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.

5. தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.

6. ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.

7. உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.

சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.

தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்கும் அற்புத ஜூஸ்!


ஆயிரக்கணக்கான மக்கள் அவஸ்தைப்படுவது தைராய்டு பிரச்சனையால் தான் . குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு தைராய்டு பிரச்சனையால் தான் இவ்வளவு கஷ்டம் என்று தெரிவதில்லை.
தைராய்டு என்பது தொண்டையின் நடுவே பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ள ஓர் சுரப்பி. இந்த சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் தான் உடலின் பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது
இந்த சுரப்பியில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது உடலின் மற்ற பாகங்களிலும் பிரச்சனைகளை உண்டு பண்ணும். தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் ஏற்படும்.
தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்கும் அற்புத ஜூஸ்!
தைராய்டு பிரச்சனை வகைகள் கழுத்தின் அமைந்துள்ள தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவை:
* ஹைப்பர் தைராய்டு
* ஹைப்போ தைராய்டு
ஹைப்பர் தைராய்டு :-
ஹைப்பர் தைராய்டு என்னும் நிலை தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதால் ஏற்படுவதாகும்.
ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள் :-
ஹைப்பர் தைராய்டு ஒருவருக்கு இருந்தால், ஒருசில அறிகுறிகள் தென்படும். அவை பெரிய கண்கள், அதிகமாக வியர்வை வெளியேறுவது, மிகுதியான சோர்வு, திடீர் உடல் எடை குறைவு, கவனச்சிதறல், வயிற்றுப்போக்கு போன்றவை.
ஹைப்போ தைராய்டு :-
தைராய்டு சுரப்பி போதிய அளவின்றி குறைவான அளவில் தைராய்டு ஹைர்மோன்களை சுரந்தால், அந்நிலையை ஹைப்போ தைராய்டு என்று அழைப்பர்.
ஹைப்போ தைராய்டு அறிகுறிகள் முகம் வீங்கி காணப்படுவது, உடல் பலவீனம், உடல் சோர்வு, மலச்சிக்கல், காரணமின்றி திடீரென்று உடல் பருமனடைவது, சரும வறட்சி போன்றவை ஹைப்போ தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
இப்போது தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :-
சர்க்கரையில்லா கிரான்பெர்ரி சிரப் - 1 கப்
தண்ணீர் - 8 டம்ளர்
இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன்
பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 3/4 கப்
எலுமிச்சை ஜுஸ் - 1/4 கப்
செய்முறை :-
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அந்த ஜூஸை தினமும் விரும்பும் நேரத்தில் குடித்து வரலாம்.
உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் :-
இந்த ஜூஸை குடிப்பதால், ஆரம்பத்தில் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றல் அளவில் மாற்றங்களைக் காணலாம். அத்துடன் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் சிறு முன்னேற்றம் தெரிந்து, தைராய்டு ஹார்மோன்கள் சீரான அளவில் சுரப்பதைக் காண முடியும்.
 

நரை முடி பிரச்சனை 2

கருவேப்பிலை , கரிசலாங்கன்னி , செம்பருத்தி இலை , பூ ஆகியவற்றை அரைத்து வடாகம் தட்டி காயவைத்து தேங்காய் எண்ணெயில் வதக்கி அதை அதிலேயே ஊறவைத்து தலைக்கு தடவினால் இளநரை நீங்கும்

நரை முடி பிரச்சனை

பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே நரை முடி பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரையின் காரணமாக நரை முடி வந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால் சிலருக்கு மயிர்கால்களில் உள்ள முடிக்கு நிறமளிக்கும் மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோ சைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருக்கும். இவ்வாறு மெலனின் அளவு குறைந்தால், கூந்தலும் நரைக்க ஆரம்பிக்கும். பொதுவாக இத்தகைய நரைமுடியானது 30 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது. இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன.
உடனே எந்த கடையில் கிடைக்கும் என்று யோசிக்க வேண்டாம். அவை அனைத்துமே வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடியவை தான். மேலும் இந்த வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், முடிக்கு எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருப்பதோடு, முடி நன்கு அடர்த்தியாக, நீளமாக மற்றும் ஆரோக்கியமாக வளரும். இப்போது நரைமுடியை தடுக்கக்கூடிய இயற்கை சிகிச்சை முறைகள் என்னவென்று கொடுத்துள்ளோம்.
குறிப்பாக இத்தகைய சிகிச்சைகள் ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவானவையே. சரி, அதைப் பார்ப்போமா!!!
ஹென்னா ஹேர் பேக்: ஹென்னா மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்கை முடிக்கு போட்டால், நரைமுடி பிரச்சனையை நிச்சயம் தவிர்க்க முடியும். அதற்கு ஹென்னா பொடியில், 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, கூந்தல் முழுவதும் தடவி ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால் முடியின் நிறம் மாறுவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ப்ளாக் டீ: நரைமுடியைப் போக்குவதற்கு ப்ளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, முடியில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்காமல், முடியை நீரில் அலச வேண்டும்.
கறிவேப்பிலை: அனைவருக்குமே கறிவேப்பிலை நரைமுடியைப் போக்கவல்லது என்பது நன்கு தெரியும். இருப்பினும் சிலர் நம்பிக்கையின்றி, அதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். எனவே நரைமுடி போகவேண்டுமெனில், கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடியானது கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
முளைக்கீரை சாறு: கருமையை இழந்த முடிக்கு, மீண்டும் கருமையை கொடுப்பதற்கு முளைக்கீரை சாற்றினை முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். இதனால் முடி நன்கு வளர்வதோடு, கருமையோடும், பட்டுப் போன்றும், மென்மையாகவும் வளரும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் முடியை கருமையாக்குவதில் மிகவும் சிறந்த ஒரு பொருள். எனவே நெல்லிக்காய் சாற்றில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து முடிக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தலானது இழந்த கருமையை மீண்டும் பெறும்

முகப்பரு வடு நீக்க


முகப்பரு வடு நீக்க வெந்தயமே சிறந்தது.
வயிறு எரிச்சல் மற்றும் உடல் சூட்டை தணிக்கும், அரிய வகை மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது.
முகப்பருவை போக்கவும், கருமையான கூந்தலை பெறவும் பயன்படுகிறது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நன்றாக வளரும். பொடுகு தொல்லையும் இருக்காது.
முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் இருந்த இடத்தில் உள்ள வடுக்கள் பலருக்கு மாறாமல் இருக்கும். இத்தழும்புகள், நம் அழகான தோற்றத்தை கெடுத்துவிடும். இதை போக்க, சிறந்த மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயம் முகப்பரு தழும்பை மட்டும் நீக்குவதில்லை; முகத்தின் தோற்றத்தையும் பொலிவுடையதாக மாற்றும் சக்தி உடையது.
எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து, அதை முகப்பருக்கள் மீது தடவினால் மென்மையாக மாறும். எலுமிச்சை சாற்றின் சக்தியால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து, முகத்தில் தடவினால், பருக்கள் உதிர்ந்து தழும்புகள் மறையும். திரும்ப பருக்கள் வருவதை தடுக்கும். வென்னீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து அரைத்து, குளிர்ந்த பின், தழும்பு உள்ள இடத்தில் தடவி, 20 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.
வெந்தயத்தை ஊற வைத்து விழுது போல் அரைத்து, முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி, அவற்றை நீக்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி, அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகாக மென்மையாக இருக்கும்.
இயற்கையான இந்த வைத்திய முறையால், வேறு எந்த பக்க விளையும் ஏற்படாது.
 

தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ்

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.

ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.

சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!!

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.
எலுமிச்சை, எலுமிச்சங்காய்
எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா:
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

இஞ்சி:
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.

தண்ணீர்:
தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

குறிப்பு:
மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.

ஜூஸ் செய்யும் முறை:
1 வெள்ளரிக்காய்
5 எலுமிச்சை
1 எலுமிச்சங்காய்
15 புதினா இலைகள்
2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
2.5 லிட்டர் தண்ணீர்
வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.
இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.

முடி உதிர்வுக்கு முக்கிய காரணம்


முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் முறையான பராமரிப்பின்மை. தினசரி தலைக்குக் குளிப்பது மிக முக்கியம். இன்று சுற்றுப்புற சூழல் மாசு எக்கச்சக்கம். வீட்டை விட்டு வெளியே போகிற எல்லோரும் தினசரி தலைக்குக் குளித்தாக வேண்டும்.
வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளித்தால் போதுமானது. வேலைச் சுமை, டென்ஷன் காரணமாக தலையில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும். தூசும் மாசும் அத்துடன் சேர்ந்து கொள்ள இரண்டும் கலந்து மண்டையின் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். காலையில் குளிக்க நேரமில்லாவிட்டாலும், இரவிலாவது குளிக்க வேண்டும்.
100 மி.லி. ஆலிவ் ஆயில்,
100 மி.லி. விளக்கெண்ணெய்,
100 மி.லி. பாதாம் எண்ணெய்
மூன்றையும் கலந்து கொள்ளவும். இதில்
50 சொட்டு ரோஸ்மெர்ரி ஆயில்,
50 சொட்டு லேவாண்டர் ஆயில்,
25 சொட்டு பே ஆயில் (பிரிஞ்சி இலையில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெய்),
50 சொட்டு சிடர்வுட் ஆயில்
ஆகியவற்றைக் கலக்கவும். 1 வாரம் இந்தக் கலவையை அப்படியே வைக்கவும்.
1 வாரம் கழித்து இந்தக் கலவை எண்ணெயை தினமும் இரவில் தடவிக் கொண்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்கவும். இப்படிச் செய்தால் முடி உதிர்வது உடனடியாக நிற்கும். 1 மாதம் தினம் இப்படிச் செய்தால் கூந்தல் நன்கு வளர ஆரம்பிக்கும்.
 

தினமும் ஒரு நெல்லிக்காய்

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.

ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?

கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல. அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உதவியோட இந்த `வெல்லம் நெல்லிக்காய்' ரெசிப்பியை உருவாக்கி பல வருசங்களா தினமும் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுட்டு வர்றோம்.

சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.

அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும்

நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்புறம், மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் இறங்கியிருக்கிறதால அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே 

பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் அற்புதமான பழம் தான் பப்பாளி. மேலும் இது அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் ஓர் பழமும் கூட. ஆனால் சிலருக்கு இப்பழம் பிடிக்காது. அத்தகையவர்கள் இப்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் பப்பாளி பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால், பப்பாளியை அன்றாடம் உணவில் தவறால் சேர்த்து வாருங்கள். இதன் மூலம் தினமும் உங்கள் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, உங்கள் அழகும் மேம்படும். குறிப்பாக பப்பாளி பல்வேறு மோசமான நோய்களின் தாக்குதல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

இங்கு தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

அதைப் படித்து தெரிந்து கொண்டு இனிமேல் இதனை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

உயிரைப் பறிக்கும் புற்றுநோய்களைப் பப்பாளி ஜூஸ் குடிப்பதன் மூலம் தடுக்கலாம். ஏனெனில் பப்பாளியில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. இது புற்றுநோய்களை உண்டாக்கும் டாக்ஸின்களை குடலில் இ-ருந்து முற்றிலும் வெளியேற்றி, குடல் புற்றுநோயின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பு வழங்கும்.

பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும். குறிப்பாக மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்களுக்கு இப்பழம் நல்ல நிவாரணத்தை வழங்கும்.

பப்பாளி உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த பழம். இப்பழத்தை தினமும் ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள சத்துக்கள், இரத்த நாளங்களில் அதிக அழுத்தம் கொடுப்பதைக் குறைக்க உதவும்.

பப்பாளி ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம், பக்கவாதம் வருவதைத் தடுக்கலாம். மேலும் பெரும்பாலான மருத்துவர்களும் இதையே பரிந்துரைக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் காற்று மாசுபாட்டினால், அசுத்த காற்றை சுவாசிப்பதால், நுரையீரலில் அழுக்குகள் அதிகம் படிந்து, பலருக்கும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் தினமும் பப்பாளி ஜூஸை குடித்து வந்தால், நுரையீரலில் உள்ள காயங்கள் மற்றும் அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

தொண்டையில் அடிநாச் சதையால் கஷ்டப்படுபவர்கள், நன்கு பழுக்காமல், ஓரளவு பழுத்த பப்பாளியை அரைத்து ஜூஸ் செய்து தேன் கலந்து குடித்து வர குணமாகும்.

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், பப்பாளி ஜூஸை குடித்து வர, உடலில் உள்ள தேவையற்ற டாக்ஸின்கள் வெளியேற்றப்படும்.

பப்பாளி ஜூஸை குடித்து வருவதன் மூலம் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

பப்பாளி ஜூஸை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், அல்சர், வயிற்று பிரச்சனைகள், முகப்பரு, படர்தாமரை, பைல்ஸ், சரும அரிப்புக்கள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு மேம்படும். ஏனெனில் இதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தில் பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து, சரும அழகை அதிகரிக்கும்.

சர்க்கரையைக் கட்டுப்படுத்த மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை.

கணையத்தை பலப்படுத்தும்! இன்சுலின் சுரக்கச்செய்யும்!
கணையத்தை பலப்படுத்தும் உணவுகள்
காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக்கூடியவையே.
150 மி.லி நீரில், 100 கிராம் அன்று பூத்த, ஆவாரம் பூவைப் போட்டு, மூடிவைத்து நீர் 100 மி.லி-யாக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும். ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு எடுக்க வேண்டும். நெல்லிச் சாற்றையும், ஆவாரம் பூ டிகாக்‌ஷனையும் தலா 50 மி.லி கலந்து, சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.
இது, கணையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர, இன்சுலின் சுரப்பு சீராகும். ஆவாரம் பூவில் கேசைன் (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இந்த ரசாயனம் புத்தம்புதிய ஆவாரம் பூவில்தான் இருக்கும். மேலும், ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆவாரம்பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், வீக்கம், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும். இந்தக் கஷாயத்தைத் தினமும் எடுத்துக்கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்த மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை.

Tuesday, 26 July 2016

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால்


உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.
5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும்.

மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம்.
அவை பற்றி…

1. வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.
2. வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
3. வல்லாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.
4. குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.
5. ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரையை ‘சரஸ்வதி மூலிகை’ என்றும் அழைக்கின்றனர்.
6. வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
7. வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.
8. இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.
9. வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.
10. நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
11. யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.
12. வல்லாரை இலையை முறைப்படி எண்ணையாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்