Wednesday, 31 August 2016

குறைந்த இரத்த அழுத்தம் / Low blood pressure

குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஜடமான்சி வேர், கற்பூரம் மற்றும் இலவங்கப்பட்டைகளை நன்றாக இடித்து போட்டு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் குறைந்த இரத்த அழுத்தம் மாறும்.

உயர் இரத்த அழுத்தம் / high blood pressure

கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

கற்பூரவள்ளி / Oregano (Karpuravalli)

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும்.  நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது. கற்புரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும். கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 
மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து. குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும். கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் . 

Monday, 29 August 2016

(18+)விந்து குறைப்பாடு

 (18+)
 விதை பிடிக்காத இளம் முருங்கைக் காய்களை உமிக்கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை காய்ச்சிய  பசும்பாலுடன் கலந்து  காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து குறைப்பாடு குறையும்.

கரிசலாங்கண்ணி இலை- சத்துக்கள்

கரிசலாங்கண்ணி இலை- சத்துக்கள்
  1.  நீர்=85%
  2.  மாவுப்பொருள்=9.2%
  3.  புரதம்=4.4%
  4.  கொழுப்பு=0.8%
  5.  கால்சியம்=62 யூனிட்
  6.  இரும்புத் தாது=8.9 யூனிட்
  7.  பாஸ்பரஸ்=4.62%
   இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாறில்  உள்ள சத்துகள்.
   மருத்துவக் குணங்கள்:
  • உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும்.
  • கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும்.
  • உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும்.
  • புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும்.
  • ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது.
  • விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி  தோல் பிணிகளை குணமாக்கும்.

பேரிக்காய்-ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பேரிக்காய் உண்ண ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

தேமல் /

ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குறையும்.

பல் நோய்கள்

புதினா கீரையை வெயிலில் உலர்த்தி தூள் செய்து கொண்டு அதனுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து தினம் பல் துலக்கினால் பல் நோய்கள் வராது.

நரம்புத் தளர்ச்சி

வசம்பை இடித்துத் தூளாக்கி, இரண்டு கிராம் அளவு எடுத்து, வாயில் போட்டு சுவைத்து, வெந்நீர் குடித்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

முடி கொட்டுவது நிற்க


* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்

பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக் கலந்த ஒரு பானம்

புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
.
செய்முறை:

1. வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும்.

2. புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும்.

3. கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும்.

4. வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும்.

5. வெல்லம் முழுமையாக கரைந்த பின் வடிகட்டியால் இறுக்கவும்.

6. இதனுடன் ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.

7. இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும்.

8. மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து.

9. சளியையும் குணப்படுத்தும்.

10. கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்.

வாயுத்தொல்லை / Gastric

தினசரி உணவுப் பழக்கத்தில் பூண்டு, வெங்காயம், மிளகு, இஞ்சி, பெருங்காயம், ஜீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வந்தால் ஜீரணப்பிரச்சனை, வாயுத்தொல்லை வராது.

வாய் துர் நாற்றம் / Bad mouth odor

வாய் துர் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய வழியை பின்பற்றி அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றில் சுடுநீரைக் கலந்து உப்புப் போட்டு குடித்தால் போதும்.

மருந்தில்லா மருத்துவம் !!!

மருந்தில்லா மருத்துவம் !!!

* எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

* கொழுகொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

* வாழைத்தண்டுச் சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வர சதை போடுவதைத் தடுக்கலாம்.

* எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

* கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

* கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

* தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

* ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

* வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

* வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் இரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

* பச்சை கொத்துமல்லித் தழைகளை அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

* சுக்கை அரைத்து நெற்றியில் பற்று வைக்க தலைவலி குணமாகும்.

* ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

* புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

* வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

* மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

* வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

* பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் நெஞ்சு சளி சீக்கிரம் குணமாகும்.

* தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும்

* வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

* சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் வயிற்றுப் போக்கு குணமாகும்.

* தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.

* நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

* சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும், மலச்சிக்கல் தீரும். நாள்பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

* மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

* பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

* சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

* வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

* சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்றுவேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்நாற்றம் போகும்.

* கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

* காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

* துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம்.

* பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்

* பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.

* நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் – இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

* பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, அதை மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

* தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

* கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

* தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

* பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

* சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்

* கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

* தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

* கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

* தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

* வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்

* துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

* கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இருமுறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

* இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த காலரா குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

* ஒரு டம்ளர் கொதிநீரில் 1 மேசைக்கரண்டி தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வயிற்றுவலி பறந்துவிடும்.

* முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் அசதி குணமாகும்.

* காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

* வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான நோய்கள் தீரும்.

* வெண்ணீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும்.

* யானைக்கால் நோய் குணமாக வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.

* பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.

* வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டுவர பித்தப்பை நோய் குணமாகும்.

* சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டுவர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

* காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து சுட வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்; முடி உதிர்வது நிற்கும்.

* எருக்கஞ் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து உடையும்.

* இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.

இருமல் குறைய பாட்டி வைத்தியம்

1. முளைக்கீரை, அதிமதுரம் (ஒரு துண்டு) மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

2. புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

3. வெந்தயக் கீரையுடன், உலர்ந்த திராட்சை (10), சீரகம் அரை கரண்டி இரண்டையும் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

4. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.

5. தூதுவளைக் கீரையுடன் அதிமதுரம், தனியா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், இருமல், விடாத தும்மல், புகைச்சல் போன்றவை குணமாகும்.

6. முசுமுசுக்கைக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, 2 கிராம் அளவுப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல், புகைச்சல் போன்றவை குணமாகும்.

7. பண்ணைக் கீரைச் சாறில் அதிமதுரத் தூளை கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

8. வங்கார வள்ளைக் கீரை, கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல், சளி, ஆஸ்துமா குணமாகும்.

9. மணலிக் கீரைச் சாறில் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

10 காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்

மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை! / jaundice disease!

மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!
பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.
வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.
ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.
சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.
நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.
பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.
தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்

Thursday, 25 August 2016

தேனில் உள்ள மருத்துவக் குணங்கள் / The medicinal properties of honey

டிபி, சளி, இருமல் குணம் அடையும். உடல் பருமன்,தொப்பை குறையும். நோஞ்சான் அன்பர்கள் தேன் நீரால் உடல் எடை பெறுவர். நோயாளிகள், சிறுவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. இதயம், ஈரல் பலம் பெறும். குரல் வளம். கண் ஒளி மிகும். எல்லாப் பிணிகளும் விலகுகின்றன. 

உலர்ந்த திராட்சை / Raisin


  • உலர்ந்த திராட்சை / Raisin

  • இதில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது தான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
  • உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும்.
  • குழந்தைகளுக்கு எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.
  • இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
  • உடல் வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
  • பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.
  • வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் ஜீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது. இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே. தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் மலச்சிக்கல் தீரும்.
  • குடற்புண் ஆற அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவறை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் குணமாகும்.
  • இதயத் துடிப்பு சீராக சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
  • சுகமான நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.
  • தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.
  • -

    பேரிக்காய் / PEAR

    மருத்துவக் குணங்கள்
    1. பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது. எனினும் ஆப்பிளில் அறவே இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் ஆப்பிளைவிட பல மருத்துவக் குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கிடைக்கும்.
    2. எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதை அடிக்கடி உண்ணும் போது நல்ல பசியும் எடுக்கும். ஜீரணமும் நன்றாக ஆகும். கிராணி என்னும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.
    3. தீடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும். மன உறுதியும் மனத்தெம்பும் ஏற்படும்.
    4. சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் இது. அவர்கள் எலும்புகளும், பற்களும் பலமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்யும்.
    5. கர்ப்பிணிகளுக்கு பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பேரிக்காய் நல்ல நண்பன். தாய்மார்கள் அடிக்கடி சாப்பிட்டால் தேவையான பால் சுரக்கும்.

    மூட்டு வீக்கம், மூட்டு வலி / Joint swelling, joint pain

    கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து கொள்ள வேண்டும். அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும். 

    கேரட் / carrot

    கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும். 

    Wednesday, 24 August 2016

    தேய்த்து வர முடி முளைக்கும்-Hair loss

    சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

    மிளகு / pepper

    உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்
    பல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

    வியர்வை நாற்றம் / Sweat odor



    வியர்வை நாற்றத்தை போக்குவதற்கு பெர்பியூம்களை பயன்படுத்தினாலும் சில சமயங்களில் அதனால் பக்கவிளைவுகளும் வரலாம்.

    இயற்கையாகவும் வியர்வை நாற்றத்தை போக்கலாம்,

    வியர்வை நாற்றத்தை போக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான்.

    எலுமிச்சம் பழத்தை உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து பாருங்கள்.

    தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம்.

    முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள், மேலும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும்.

    அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும்.

    Tuesday, 23 August 2016

    ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக / Why cling sticker on top of the Apple


    ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
    யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது.
    PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
    சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
    எவ்வாறு அறிவது:
    1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )
    2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
    3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
    இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
    அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!

    ஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்.... / Crumble the beans overnight remedies for kidney stones ....


    ஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....
    ஆப்பரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு சிறுநீரகத்தில் உருவாகும் கற்களும் விதிவிலக்கல்ல. அவ்வாறு ஆப்பரேசன் செய்து நீக்கிவிட்டாலும் இதுவரை ஆப்பரேசன் செய்து கொண்டவர்களுக்கும் திரும்ப கற்கள் உருவாவதும் மீண்டும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதும் வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
    எனக்கு மூன்று முறை சிறுநீரகக் கற்கள் நீக்கப்பட்டுள்ளது. நான்கு முறை சிறுநீரகக் கற்கள் நீக்கப்பட்டன என்று கணக்குச் சொல்பவர்கள் தான் அதிகம்.
    ஏன் இத்தனை முறை ஆப்பரேசன் செய்ய வேண்டி வந்தது? என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
    முதல்முறை கற்கள் உருவான பொழுதே அதற்குக் காரணம் என்னவென்று கண்டுபிடித்து அதை சரிசெய்திருந்தால் இரண்டாவது முறை கற்கள் உருவாகி இருக்காது. அதைவிட்டுவிட்டு அப்ரேசன் செய்து கற்களை அகற்றுவதனால் அந்த மனிதன் செய்யும் தவறுகளால் மீண்டும் கற்கள் உருவாகிறது. பிறகு மீண்டும் அப்ரேசன் செய்வதே தொடர்கதையாகிப் போய்க் கொண்டே எனவே நிரந்தரமாக சிறுநீரகக் கற்களை நீ ஆப்பரேசன் இன்றிக் கரைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அது மிக எளிமையான வழியும் கூட.
    இதற்கு பீன்ஸ் வைத்தியம் என்று பெயர். பீன்ஸ் என்றால் சோயா பீன்ஸ் என்று புரிந்து கொள்ள வேண்டாம். ஆங்கிலக் காய்கறி என்று சொல்லக்கூடிய பீன்ஸ்.
    சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக கூறுபவர்கள் கீழ்கண்டவாறு நாம் சொல்வதைக் கடைபிடித்தால் ஓரே நாளில் கற்கள் கரைந்து குணமடைந்து விடுவார்கள். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தால் கூட அங்கு கற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
    என்ன செய்ய வேண்டும்?
    அரைக்கிலோ பீன்சை எடுத்துக் கொண்டு அதில் உள்ள விதைகளை எல்லாம் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு நறுக்கிய பீன்சை அதில் போட்டு அடுப்பில் வைக்கவேண்டும். இளம் தீயாக எரிய விடவேண்டும். கேஸ் அடுப்பு எனில் சிம்மில் வைத்து அதை வேக வைக்க வேண்டும். அதாவது தீ கொஞ்சம் தான் எரிய வேண்டும். விறகு அடுப்பாக இருந்தாலும் நெருப்பு மிதமாக அதிலிருந்து வெளிப்படுமாறு வைத்துக்கொண்டு பீன்சை வேகவைக்க வேண்டும். சீக்கிரமாக அதுவேகாமல் இவ்வாறு இரண்டு மணிநேரம் கழித்து வெந்திருக்கக் கூடிய பீன்ஸையும், நீரையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு கூல்போல் அரைத்துக் கொண்டு ஆறியபின் குடித்துவிடவேண்டும். இந்த பீன்ஸ் கூலைக் குடித்தவுடன் அந்தக் கணத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் மூன்று லிட்டர் தண்ணீரைக் குடித்துவிடவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் என்கிற அளவில் சிறிதளவு அதக் குடித்து விடவேண்டும். இவ்வாறு 3 மணிநேரத்திற்குள்ளாக 3 லிட்டர் தண்ணீரைக் குடித்து முடிக்கவேண்டும்.
    அதன் பின்னர் சிறுநீர் கழிக்கும் பொழுதெல்லாம் அதை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு கற்கள் அதில் வந்திருக்கிறதா? எனப் பார்க்கவேண்டும். எப்படியும் அன்று இரவுக்குள் சிறுநீரக கற்கள் வெளியேவந்துவிடும். அதுவரை வேறு எந்த உணவுகளும் எடுத்துக்கொள்ள கூடாது. அதன் பிறகு மூன்று மணி நேரத்திருகுப் பின் சாதரணமாய் குடிக்கும் நீரைவிட சற்று அதிகமாகக் குடித்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது அன்று முழுவதும் ஓய்வாக இருக்கவேண்டும். வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது. கண்களை மூடிப்படுத்துக் கொண்டு நன்கு ஓய்வாகவும் உடலும், மனதும் தளர்வாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
    இப்படிப்பட்ட வழிமுறைகளுடன் செய்தால் சிறுநீரகக்கற்கள் கண்டிப்பாக கரையும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி நிறையப்பேர் குனமடைந்திருக்கிறார்கள். ஒரே நாளில் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிட்டது என பலரும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள். ஸ்கேன் ரிப்போர்ட் படி கிட்னி கற்கள் கரைந்துவிட்டது என்றும் அவை இருப்பதற்கான அறிகுறியே இல்லை என்றும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு உள்ளனர்.
    எனவே சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இந்த வழிமுறையைக் கையாண்டு ஆரோக்கியம் பெறலாம். சிறுநீரகக்கற்களைக் கரைப்பதற்கான வழிமுறைகளைப் பார்த்தோம். ஆனால் இதைவிடவும் சிறந்த வைத்தியம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் சிறுநீரகக் கற்கள் ஏன் உருவாகிறது. அது உருவாகாமல் தடுப்பதற்கு என்ன வழி என்பது தான் அது.
    நமது அனாடமிக் செவிவழித் தொடுசிகிச்சை என்ற புத்தகத்திலும், டிவிடியிலும் இதுகுறித்து விளக்கமாகக் கூறி இருக்கிறோம். இருப்பினும் அதுபற்றி இங்கு சுருக்கமாக பார்த்துவிடலாம்.
    சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்.
    1. உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும்.
    2. உப்பு குறைவாக சாப்பிட்டாலும் வரும்.
    3. தண்ணீர் அதிகமாகக் குடித்தால் வரும்.
    4. தண்ணீர் குறைவாக குடித்தால் வரும்.
    5. மனதில் பயம் இருந்தால் வரும்.
    6. காற்றோட்டம் இல்லாத இடத்தில் உறங்கினால் வரும்.
    7. கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்யூடு போன்றவை பயன்படுத்தினால் வரும்.
    8. ஏசி, ரூமில் இருப்பவர்களுக்கு வரும்.
    மேற்சொன்ன காரணங்களைக் கவனமாக படித்துகொண்டு அதன்படி நடந்து வரவேண்டும். ஏசியைப் பயன்படுத்தவே கூடாது. கொசுவர்த்திச் சுருளில் உள்ள இரசாயான நச்சுக்கள் சுவாசத்தின் வழியே உள்ளே நுரையீரலுக்கு சென்று சிறுநீரகத்தில் கல்லாய் மாறுகிறது. எனவே கொசுவர்த்தியைப் பயன்படுத்தவே கூடாது.
    மனதில் பயம் இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். எனவே மனதில் உள்ள பயத்தைப் போக்கி சிறுநீரகக் கற்களைக் கரைத்துவிட முடியும். அது எப்படி என்பதை இந்த இதழில் வெளியாகி கட்டுரையைப் படிக்கும் பொழுது புரிந்துகொள்வீர்கள்.
    அடுத்ததாக நம் நாவிற்கு எந்தளவிற்கு உப்புச் சுவை தேவைப்படுகிறதோ அந்த அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். உப்பினைக் குறைவாகவும் எடுத்துக்கொள்ள கூடாது. கூடுதலாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உப்பில் தற்பொழுது பாக்கெட்டுகளில் வரும் போடி உப்பினைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதில் கல் உப்பினைப் பொடி செய்து பயன்படுத்தலாம். கல் உப்பினை பயன்படுத்துவதே முன்னர் சட்டியில் போட்டு வறுத்துப் பயன்படுத்துவது மிகமிக சிறந்தது.
    தண்ணீரின் தேவை நமது தாகத்தைப் பொறுத்து மாறுபடும். நாம் செய்யும் வேலை, தட்ப வெப்பநிலை போன்றவற்றைப் பொறுத்து தண்ணீரின் தாகம் நமக்கு இருக்கும். எனவே தண்ணீரை தினசரி இவ்வளவு லிட்டர் தான் குடிக்கவேண்டும். என்று கணக்கு வைத்துக் கொண்டு தாகம் எடுக்காமல் தண்ணீர் குறைவாகவும் குடிக்கக் கூடாது? அதிகமாகவும் குடிக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள் எப்பொழுது குடிக்கின்றன. எவ்வளவு தேவையோ அவ்வளவு குடிக்கின்றன. நாமும் அதைக் கடைப்பிடிப்போம்

    100 கிராம் முருங்கை இலை / 100 grams Moringa leaf

    கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு

    நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையைக் கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாகத் தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கைக் கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களைக் குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

    100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

    ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
    காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
    பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
    பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது
    வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
    ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது
    இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    வேர் பகுதியில் நீர் செல்லுமாறு சிறு குழாயை வைத்தால் நீரின் தேவையை வெகுவாகக் குறைக்கலாம். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சித் தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம்.

    சில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.

    இளநரை / greyhair

    சிலர் கொஞ்சம் வெள்ளை முடி தோன்றினாலே பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நமக்கு வயதாகி விட்டது என்று தோன்றும். சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது. இளநரைக்கு எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே தீர்வு காணலாம். இளநரை உள்ளவர்கள் மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன், நன்றாக கலந்து கொள்ளுங்கள். 

    (கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதெல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள். இதை மேலே குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து குளிக்கவும்.

    இந்த கலவையை தொடர்ந்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். வாரம் இருமுறை நல்லெண்ணை தேய்த்து எண்ணெய் குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம். இது உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்லெண்ணை தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட இளநரை வராமல் இருக்கும்.

    செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நிறைய எண்ணெய் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும். முடி செம்பட்டையாகாமல் இருக்கும் கருவேப்பிலை பொடி, கறிவேப்பிலையை உணவு அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும். நரைமுடி வருவதையும் தவிர்க்கலாம்

    எம்பிபிஎஸ் மருந்துக்கடைகள்.....! / MBBS pharmacies .....!


    எம்பிபிஎஸ் மருந்துக்கடைகள்.....!
    சளி, இருமல், உடல் வலி ரோதனை அதிகரிச்ச நிலையில ஒரு எம்பிபிஎஸ் டாக்டரைத்தான் பார்ப்பமேன்னு போய் உட்கார்ந்தேன். நர்சு அம்மா தெர்மா மீட்டரை கொடுத்தாங்க...உங்களுக்கு மருந்து ஏதும் அலர்ஜி இல்லையேன்னு கேட்டாங்க...இல்லைன்னேன். சரி வெயிட் பண்ணுங்கன்னாங்க. டெம்ப்ரேச்சர் எப்படி இருக்குன்னு நர்சு அம்மாகிட்ட கேட்டேன் ..நார்மல் அப்படீன்னாங்க.
    டாக்டரைப் பார்த்தேன், அவர் என்னைப்பர்த்தார்..ஸ்டெத் வச்சுப்பார்த்தார். கர் கர் என்றது நெஞ்சு. ரொம்ப மோசமா இருக்கே...காஸ்ட்லியான மருந்து எழுதித்தர்றேன், அப்படீன்னு மளிகைக்கடை லிஸ்ட் போல எழுதினார். கூடவே இன்ஹேலர் யூஸ் பண்ணுவீங்களா ? என்றார்..நான் செய்ததில்லை செய்யப்போவதுமில்லை என்றேன்..எதுக்கும் அதையும் பிரிஸ்கிரிப்ஷன்லையே எழுதி இருக்கேன். வாங்கி வச்சுக்குங்க. இந்த மாத்திரைகளையெல்லாம் மூனு நாளைக்கு தொடர்ந்து சாப்பிடுங்க. நல்லாயிடுச்சேன்னு நிறுத்தவேண்டாம் கூடுதலா ரெண்டு நாள் சாப்பிடுங்க...எதுக்கும் ஒருதடவை வந்து கேட்டுட்டு நிறுத்துங்க..என்று சொல்லிவிட்டு.. லிஸ்ட் எழுதியதற்கு ஊதியமாக கன்சல்டன்சி பீஸ் 120 வாங்கிக்கொண்டார். கூடவே சொன்னார்... பக்கத்து மெடிக்கல் ஷாப்பிலேயே எல்லா மருந்தும் கிடைக்கும்னு.
    ஓ...பரவாயில்லையே...என்று நன்றி சொல்லிவிட்டு மருந்துக்கடைக்காரரிடம் லிஸ்டை சாரி பிரிஸ்கிரிப்ஷனை நீட்டினேன். திடீரென்னு ஏதோ ஒரு உள்ளுணர்வு....எல்லா மாத்திரைகளிலும் ஒரு வேளைக்கு மட்டும் கொடுங்க என்றேன்...என்னை மேலும் கீழும் பார்த்தவர் ஒரு வேளைக்கு மட்டும் கொடுத்தார். ஒரு வேளைக்கு மட்டுமே 79 ரூபாய் வந்தது. 15 வேளைக்கு என்றால் கிட்டத்தட்ட 1200 ரூபாய் வந்தது.
    ஏதோ யோசனை வந்தவனாக தாவர மருத்தும் அறிந்த தோழி ஒருவருக்கு போன் செய்தேன். விசயத்தைச் சொன்னேன். சிரித்தவர் வீட்டுக்குச் சென்று அருகில் உள்ள மளிகைக்கடை ஒன்றுக்கு சென்றுவிட்டு போன் செய்யச்சொன்னார். போகும்போது கற்பூரவல்லி மற்றும் துளசி வாங்கிச்செல்லுமாறும் சொன்னார். மளிகைக்கடைக்குப்போனபோது அவர் சொன்ன பொருட்களை வாங்கினேன்..சுக்கு, பூண்டு இப்படி...125 ரூபாய்தான் வந்தது.
    வீட்டுக்கு வந்து மறுபடியும் அவருக்கு போன். அவர் டைரக்ட் செய்தபடி பொருட்களை தண்ணீரில் காய்ச்சி அதைவடிகட்டி மூன்று கப்புகள் அருந்தினேன். சுகமான உறக்கம். தொடர்ச்சியா இரண்டு நாள் அதே கலவைதான் காஃபி, டீக்குப் பதிலாக...
    பூரண நலம்.....
    அப்பா எம்பிபிஎஸ்களா....இனிமே கிளினிக்கெல்லாம் வக்காதீங்க ஸ்ட்ரெய்ட்டா மருந்துக்கடைகள்ளையே உக்காந்துருங்க....யாவாரம் நல்லா நடக்கும்.
    பின்குறிப்பு : எம்பிபிஎஸ் படித்தும்..சேவை மனப்பான்மையோடு செயல்படும் மருத்துவர்கள் விதிவிலக்குகள்.

    கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க .../ Tooth paste


    கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...
    நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ
    பட்டையா கலர்
    கோடு ஒன்னு இருக்கும் . பச்சை ,
    ப்ளூ , சிவப்பு, கருப்பு போன்ற
    கலர்களில் இருக்கும் ..
    அந்த கலர்களின் அர்த்தம் ,
    பச்சை - இயற்கை
    ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
    சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
    கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .
    இனி டூத் பேஸ்ட் வாங்கும்
    போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் .
    ப்ளூவும் பச்சையும் தான்
    சரியானா தேர்வாக இருக்க முடியும்

    குளிர்சாதனப்பெட்டி - Refrigerator

    குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!’’ என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாகப் பேசுகிறார்...
    குளிர்சாதனப்பெட்டி... எதற்காக?
    ``மருந்தையும், சமைக்காத உணவையும் குளிர்படுத்தி பாதுகாத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மின்சாதனமே, இயந்திர தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியக் கண்டுபிடிப்பான குளிர்சாதனப்பெட்டி. உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அவற்றைப் பாதுகாத்து, குறிப்பிட்ட அந்த உணவுக்கு தட்டுப்பாடு வரும் காலத்தில் பயன்படுத்துவது, உணவுகளை உற்பத்தி இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு பாதிப்படையாமல் எடுத்துச் செல்வது, மருந்துகளைப் பாதுகாக்கப் பயன்படுத்துவது, பால், காய்கறி போன்ற சமைக்காத உணவுகளைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது... இதெல்லாம்தான் குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிப்பின் நோக்கங்கள்.
    இன்றோ, சமைத்த உணவுகளையும் ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது, பல வகையான உணவுப் பொருட்களையும் வைக்கும்போது சரியாக மூடாமலும், சரிவர பிரித்து வைக்காமலும் ஸ்டோர் செய்வது, போன வாரம் வாங்கிய காளான் முதல், மிகுந்துபோன குழம்பு வரை அடைத்து வைப்பது என... ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி, கண்ணுக்குப் புலப்படாத விஷப்பெட்டியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது!
    குளிர்சாதனப்பெட்டி அவசியமா?
    குளிர்சாதனப்பெட்டி அவசியம் இல்லை என்பதுதான் உண்மை. நம் முன்னோர் குளிர்சாதனப் பெட்டியை அறியவில்லை; அவர்களின் ஆரோக்கியத்துக்கும் குறைவில்லை. அவர்களிடம் இருந்த சுறுசுறுப்போ, நேரமோ நமக்கில்லை என்பதால், நம் சோம்பேறித்தனத்துக்கு சாமரம் வீசும் ஃப்ரிட்ஜை சார்ந்து வாழப் பழகிவிட்டோம். முழுக்க முழுக்க, மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்காக கண்டிபிடிக்கப்பட்ட இந்த சாதனம், அவர்களின் சீதோஷ்ணம், வேலை, சூழலுக்குப் பொருந்தும். ஆனால், எல்லாவற்றிலும் ‘வெஸ்டர்னைஸடு’ ஆகும் நமக்கு, ஃப்ரிட்ஜும் விதிவிலக்கல்லாமல் போய்விட்டது. இதனால், அடிக்கடி காய்கறி வாங்க வேண்டிய வேலையும், மூன்றுவேளை சமைக்கும் வேலையும் குறையும் என்பதே பலரின் நினைப்பு. கொஞ்சம் மெனக்கெட்டால், இந்த சார்பை விலக்கலாம். இல்லையென்றால், அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் நம் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் குறைக்கும்.
    செய்ய வேண்டிய விஷயங்கள்!
    பெரியவர்கள், குழந்தைகள் உள்ள வீடுகளில் வயிற்றுவலி, பேதியில் இருந்து, ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமன் வரை ஃப்ரிட்ஜ் உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல. ‘இவ்வளவு பாதிப்புகளா?! ஆனாலும், ஃப்ரிட்ஜ் இல்லாமல் இருக்க முடியாதே?’ என்பவர்களுக்கு... 10 கட்டளைகள்... இதோ!
    1. 5 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான டெம்பரேச்சரில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளரக்கூடும் என்பதால், -15 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் டெம்பரேச்சரை செட் செய்ய வேண்டியது மிக முக்கியம். முடிந்தவரை 4 டிகிரி செல்சியஸ் அளவில் எப்போதும் வைத்துப் பயன்படுத்துவது நல்லது.
    2. மின்சாரம் தடைபட்டால் இரண்டு மணி நேரம் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவு கெடாமல் இருக்கும். அதற்குப் பின்னும் மின்சாரம் இல்லையெனில், உடனடியாக ஃப்ரிட்ஜில் உள்ள உணவுகளை வெளியே எடுத்து, சூடுபடுத்தி சாப்பிட்டுவிட வேண்டும். வெயில் காலத்தில், ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் இருந்தாலே, உணவுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்திவிட வேண்டும்.
    3. காய்கறி, பழங்கள், கீரைகள், உணவுகள், அசைவ உணவுகள் இப்படி அனைத்தையும் சரிவரப் பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அதாவது, ஃப்ரீஸரில் அசைவ உணவுகள், டிரேயில் பால் பாக்கெட்டுகள், டோர்களில் கூல்டிரிங்ஸ், கீழ் டப்பாவில் காய்கறிகள், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகள், நடுத்தட்டில் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மேல்தட்டில் சமைத்த உணவு... இப்படி ஒவ்வொன்றையும் அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் முறையாக இறுக்கமாகப் பேக் செய்து/ மூடி வைக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டியது மிக முக்கியம்.
    செய்யக் கூடாத விஷயங்கள்!
    4. என்னதான் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டாலும், உணவில் மாற்றம் நிகழத்தான் செய்யும். உதாரணமாக, பிரெட் உள்ளிட்ட மைதா சார்ந்த பொருட்களில் உருவாகும் பூஞ்சை, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு எந்தப் பொருளையும் ஸ்டோர் செய்ய வேண்டாம்.
    5. ஆட்டுக்கறி, கோழிக்கறி, வடித்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும், அது மற்ற உணவுகளுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால் இவற்றை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வதைத் தவிர்க்கவும்.
    6. அதிக சூடான உணவுப் பொருட்களை ஒருபோதும் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கக்கூடாது. அது அதிக மின்சாரம் செலவாக வழிவகுப்பதுடன், அந்த வெப்பம் ஃப்ரிட்ஜின் மொத்த டெம்பரேச்சரையும் தொந்தரவு செய்து, உணவுப் பொருட்களை பாதிக்கும்.
    7. பொதுவாக, குறைந்த டெம்பரேச்சரில் இருந்து அதிக டெம்பரேச்சருக்கு உள்ளாகும்போது, அந்தப் பொருட்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கும் காய்கறிகள், உணவுகளை அவற்றிலிருக்கும் குளிர் தன்மை குறைந்ததும் சமைத்தோ, சூடுபடுத்தியோ பயன்படுத்தாவிட்டால் ஆபத்து.
    8. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது பரிந்துரைக்கத்தக்கதல்ல. காரணம், அதில் நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் உருவாகி பாழாவதோடு, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும். இதில் சிலர் சமைத்து, உள்ளே வைத்து, வெளியே எடுத்து சூடுபடுத்தி, மீண்டும் உள்ளே வைத்து என்று பயன்படுத்தினால் அது உணவாக இருக்காது, விஷமாகிவிடும்.
    9. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், நுண்சத்து குறைபாடு உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
    10. குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்றாலும், சுவை, விட்டமின் சத்து குறைவதுடன், போனஸாக பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று கிடைக்கும். எனவே, எச்சரிக்கை தேவை!
    ஃபிரிட்ஜ்... உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக எடுத்து சாப்பிடத்தானே அன்றி, அழுகும் நிலைக்கு முன்வரை வைத்திருந்து சாப்பிட அல்ல என்பதை நினைவில் கொள்க!’’
    - விழிப்பு உணர்வும் எச்சரிக்கையும் தந்து நிறைவு செய்தார், பவானி!
    என்னதான் மாற்று?!
    காய்கறிகளை வாரக் கணக்கில் வாங்கி வைக்காமல் அதிகபட்சம் இரண்டு, மூன்று நாட்களுக்கு என வாங்கிப் பயன்படுத்தலாம். தேவைக்கும் அதிகமாகச் சமைத்து, மீகுந்துவிட்டது என ஃப்ரிட்ஜுக்குள் திணிக்காமல் அளவாகச் சமைத்து அன்றன்றே சாப்பிட்டுவிடலாம். சாதம் மிகுந்துவிட்டால், வடகம் போடலாம். மீன், நண்டு போன்ற அசைவ உணவுகள், கடலில் இருந்து பிடிக்கப்பட்டு பல நாட்கள் கழித்தே நம்மை வந்து அடைகின்றன. அவற்றை மேலும் வீட்டில் ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்தால் கிருமித் தொற்று நிச்சயம். அது மற்ற உணவுகளுக்கும் பரவும் ஆபத்தும் உள்ளது.
    ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்?
    ஃப்ரிட்ஜ் பராமரிப்பு!
    குளிர்சாதனப்பெட்டியை பராமரிக்கும் முறைகளைச் சொல்கிறார், சென்னை, ‘ஜே.கே. எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்’ உரிமையாளர் ராமகிருஷ்ணன்...
    குளிர்சாதனப்பெட்டியை எப்போதும் காற்றோட்டமான, சூரியஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும்.
    சிலிண்டரில் இருந்து கசியும் வாயு, குளிர்சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறியுடன் சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அடுப்பில் இருந்து ஃப்ரிட்ஜை தூரமாக வைக்கவும்.
    குளிர்சாதனப் பெட்டியிலேயே குறிப்பிட்டிருக்கும் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற கூலிங் அளவைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி திறந்து மூடினால், அதிக மின்சாரம் செலவாகும்.
    ஃப்ரீஸரில் ஐஸ் சேர்ந்துவிட்டால் ‘டிஃப்ராஸ்ட்’ ஆப்ஷனை பயன்படுத்த வேண்டுமே தவிர, கூர்மையான பொருட்களைக்கொண்டு குத்தி எடுப்பது கூடாது.
    பழைய மாடல் ஃபிரிட்ஜில் பின்புறம் இருக்கும் டிரைனேஜ் வாட்டரை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும்.
    இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உட்புறம் உள்ள கிளாஸ் டோர்களை வெளியே எடுத்துத் துடைக்கவும்.
    வாரத்தில் ஒருநாள் சோப் பவுடர் கலந்த தண்ணீரில் மிருதுவான துணியை நனைத்துப் பிழிந்து உட்புறம், வெளிப்புறம் துடைத்து, நன்றாகக் காயவிட்டுப் பயன்படுத்தலாம். எலுமிச்சைப் பழத்தை கட் செய்து அல்லது கரித்துண்டுகளை இரண்டு மூலைகளில் வைத்தால், துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.
    குழந்தைகளுக்கு ஆகாது... குளிர்சாதனப் பொருட்கள்!
    இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகள் வீட்டில் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் ஆகியிருக்கும் சாக்லேட், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் வகைகளைத்தான் ஆசையாகச் சாப்பிடுகின்றன. இந்தப் பொருட்களில் உள்ள சர்க்கரையின் அளவு, குளிர்படுத்தப்படும்போது இன்னும் அதிகமாகி, குழந்தைக்கு வயிற்றுவலியில் இருந்து ஒபிஸிட்டி வரை பிரச்னைகளைத் தரும். ‘ஃப்ரிட்ஜ்ல இருந்து கூல்டிரிங்க்ஸ், சாக்லேட்ஸ் சாப்பிடக் கூடாது’ என்று குழந்தைகளை கண்டிப்பது அல்ல தீர்வு. அதை வாங்கி ஸ்டோர் செய்யாமல் இருப்பதே நிரந்தரத் தீர்வு!
    மருந்துகள் பத்திரம்!
    குளிர்சாதனப்பெட்டியில் மருந்துகளை ஸ்டோர் செய்யும் முறைகளைச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற குழந்தைகள்நல மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ்...
    ‘‘இன்சுலின் போன்ற கட்டாயம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தே பயன்படுத்த வேண்டிய மருந்துகளுக்கு, ஓர் இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இதன் அருகில் உணவுப் பொருட்கள், பூக்கள் வைப்பது கூடாது. மருந்து இருக்கும் சமயத்தில் அசைவ ஸ்டோரேஜ் கூடாது. மருந்தால் உணவும், உணவால் மருந்தும் பாழாகக்கூடும்.’’s. 

    வெங்காயத்தை எப்படிபயன்படுத்தினால் என்ன பலன்கள்? - What results onions ?


    வெங்காயத்தைஎப்படிபயன்படுத்தினால்_என்னபலன்கள்கிடைக்கும்‬?
    1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
    2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
    3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
    4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
    5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
    6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
    7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
    8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
    9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
    10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
    11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
    12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
    13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
    14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
    15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
    குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
    16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
    17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
    18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
    19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
    20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
    21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
    22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
    23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
    24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
    25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
    26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
    27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
    28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
    29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
    30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
    31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
    32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
    33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
    34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
    35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
    36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
    37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
    38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
    39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
    40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
    41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
    42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
    43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
    44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
    45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
    46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
    47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
    48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
    49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
    50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

    திரிபலா / புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



    திரிபலா 
    திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.
    திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
    ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும்.
    நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
    ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
    உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
    செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
    திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
    வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
    இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
    திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
    இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
    இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
    ‪#‎சுவாசக்கோளாறுகள்‬
    சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
    தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
    புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.