Tuesday, 9 August 2016

குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை

தமிழகத்தின் வளமான நிலங்களின் வரப்புகளிலும், நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம். செடியின் உச்சியில் பந்து போன்ற இதன் பூக்கள் மொட்டை தலைபோன்று காட்சியளிக்கும். இதனால் மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு. பச்சை நிறத்தில் தோன்றும் இந்த பூக்கள் நாளடைவில் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை, நாறும் கரந்தை என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் கரந்தை பல்வேறு மருத்துவ பயன்களை தன்னுள் கொண்ட கற்பக மூலிகையாகும்.
இதில் கரந்தையும், சிவகரந்தையும் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது. கொட்டை கரந்தை சற்றேறக்குறைய சிவகரந்தைக்கு ஒப்பாக இருந்தாலும். மணத்தில் சிவகரந்தை சிறப்புடையது. கரந்தையில் வெண்மை, செம்மை என இரண்டு வகையுண்டு, மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூலம் மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி, தளர்ந்து தொங்கும் மார்பகம், மனக்கோளறுகள் ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.
கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.
ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே
வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே
சித்துகற்கும் ஆசை சிதையேனே என்குதே
கொட்டை கரந்தையின் பட்டையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூலம் குணமாகும். இதன் முழுச்செடியை கசாயம் வைத்து சாப்பிட தொடக்க நிலையில் உள்ள பைத்தியம் குணமாகும். சூரணம் செய்து உண்பதால் தலை, மூளை, இதயம் வலிமை அடையும்.இதன் கசாயத்துடன் சீரகத்தை பொடித்து போட்டு காலை, மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து நோய்கள் நீங்கும்.கொட்டை கரந்தையின் சமூலத்தை இடித்து சூரணம் செய்து அதில் 4 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை மற்றும் கரப்பான் நோய்கள் தீரும்.
இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு கிராம் எடை வீதம் நாள்தோறும் காலை மாலை சாப்பிட தோல்நோய்கள் அனைத்தும் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.இந்த பொடியுடன் கரிசிலாங்கண்ணி பொடியை சம அளவில் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட இளநரை நீங்கும். உடல் பலம் பெறும்.
இந்த பொடியுடன் கரிசிலாங்கண்ணி பொடியை சம அளவில் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட இளநரை நீங்கும். உடல் பலம் பெறும். கொட்டை கரந்தையின் பூக்களை பொடிசெய்து சாப்பிட உடல் சூடு குறைந்து குளிர்ச்சிபெறும்.கொட்டை கரந்தையின் விதைகளை சேகரித்து பொடி செய்து ஒரு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட செரியாமை, இருமல் நீங்கும். இலைப்பொடியை 2 கிராம் அளவில் சாப்பிட வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.
கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு
வெட்டை தணியுமதி மேகம்போந்-துட்டச்
சொறி சிரங்கு வன்கரப்பான் றோற்றாது நாளும்
மறிமலமுந் தானிறங்கு மால்
என்கின்றார் அகத்தியர்.
சிவகரந்தை:
இதே போல் சிவகரந்தையும் பல்வேறு நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாந்தி, சுவையின்மை, ஆண்மைக்குறைவு கரப்பான், காசம், அக்கினிமாந்தம் நீங்கும். துவர்ப்பும் சிறுஅளவில் கார்ப்பு சுவையும் கொண்ட இதன் இலையை பொடித்து 4 கிராம் முதல் 8 கிராம் வரையில் வெண்ணெய் சேர்த்து சாப்பிட மூல நோய் நீங்கும்.
வாந்தி யரோசகத்தை மாற்றும் பசிகொடுக்கும்
சாய்ந்த விந்து வைக்கட்டுந் தப்பாதே- ஏந்தழகைத்
தண்டா துறச்சோர்க்குஞ் சாந்த பரிமளத்தைத்
தண்டாச் சிவகரந்தை
என்று அகத்தியர் இதன் சிறப்பை பாராட்டுகிறார்.
கந்த நாறு கரந்தை யதின் குணம்
மந்த வாதங் கரப்பனை மாற்றிடுத்
தொந்த ரோகந் துடைக்கு மிருமலர
மந்த நோயுந் தணிக்கும் மானணயே
என்கின்றார் தேரையர். சிவகரந்தையின் இலைச்சாறு பாதரசத்தை சுத்தி செய்து அதை நீராய் மாற்றவும் செய்யும் தன்மை கொண்டதால் ரசமணி செய்பவர்களுக்கும், ரசவாத வித்தை புரிபவர்களும் இதை அதிகம் நாடுவார்கள். கிராமங்களில் கைகளில் சிறு குச்சியை வைத்த கொண்டு சிறுவர்கள் விளையாடும் போது இந்த செடியை தட்டுவார்கள் அப்பொழுது இதிலிருந்து வரும் மணத்தை விரும்பி மீண்டும் மீண்டும் தட்டிச்செல்வார்கள். இந்த மணமிக்க செடிதான் கொடிய மூலத்தையும் காசத்தையும் நீக்கி மனித குலத்தை வாழ்விக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதை தேவையறிந்து முன்னோர் சொல்லிய வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

No comments:

Post a Comment