- செந்தாமரை மலர் இதழ்களை பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் சேர்த்து இரவு தயார் செய்து கொள்ளவும் .மறுநாள் காலை அரை டம்ளர் அளவு தண்ணீர் வடிகட்டி எடுக்கவும்.. அதை காலை வேளையில் குடித்து வந்தால் சளி இல்லாமல் வரும் வறட்டு இருமல் குறையும்.
Friday, 30 September 2016
வறட்டு இருமல் / dry cough
அன்னாசிப் பூ / Pineapple flower
- சிலருக்கு எத்தகைய மென்மையான உணவுகளை உட்கொண்டாலும் செரிமானம் ஆகாது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் இத்தகைய தொந்தரவுகள் வருவதுண்டு. இதனால் புளித்த ஏப்பம், உருவாகும். மலச்சிக்கல், வயிற்றுப்புண், மூலநோய்கள் உண்டாகக் கூட வாய்ப்புண்டு.
- இந்த தொந்தரவு உள்ளவர்கள் எத்தகைய உணவை சமைக்கும்போதும், அதில் சிறிது அன்னாசிப் பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். குடலின் உட்புறச் சுவர்கள் பலப்படும்.
- செரிமானமின்மையால் சிலருக்கு புளித்த ஏப்பம் அடிக்கடி உண்டாகும். இவர்கள் அன்னாசிப் பூவை பொடி செய்து 1/2 கிராம் அளவு எடுத்து நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் உணவுக்குப் பின் நீருடன் சாப்பிட்டு வந்தால் புளி ஏப்பம் உண்டாகாது.
- உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் இயங்கச் செய்வது ஹார்மோன்களே. இந்த ஹார்மோன்கள் சரிவர சுரக்க செய்யும் தன்மை அன்னாசிப் பூவிற்கு உண்டு. இதனால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். எனவே அன்னாசிப் பூவை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
- அசைவ உணவு சமைக்கும்போது அதில் மறக்காமல் அன்னாசிப் பூ சேர்ப்பது நல்லது. இதனால் அசைவ உணவுகள் எளிதில் செரிமானம் ஆகும். மேலும் நல்ல சுவையுடன், நறுமணமும் கிடைக்கும்.
- அன்னாசிப் பூவின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேல்பூச்சாகப் பூசுகிறார்கள்.
வயிற்று வலி / Abdominal pain
மருதம் இலையை அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர நாட்பட்ட வயிற்று வலி குணமாகும்.
ஞாபக சக்தி பெருக / Increase Memory Power
மணலிக்கீரை :
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
Wednesday, 28 September 2016
அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
* நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
* இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
* வயிற்றுப் புண் குணமாகும்.
* இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
* நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
* நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
* மலச்சிக்கல் நீங்கும்.
* புற்று நோய்க்கு நல்ல மருந்து.
* உடல் இளைக்க உதவும்
* இரவில் நல்ல தூக்கம் வரும்.
* பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
* மூட்டு வலி நீங்கும்.
* கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
* நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
Tuesday, 27 September 2016
ஆடா தொடை மருத்துவக் குணங்கள்
ஆடா தொடை இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும். இது அளவில் குழந்தைகளுக்கு ஐந்து சொட்டும், சிறுவர்களுக்கு பன்னிரண்டு வயது வரை பத்துச் சொட்டும் பெரியவர்களுக்கு பதினைந்து சொட்டும் அளவாக கொடுத்தால் போதும்.
முகத்தில் கரும்புள்ளி நீங்க
தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.
வசம்பு
பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது

Thursday, 22 September 2016
பப்பாளி - pappaya
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
எலுமிச்சம் பழம் - lemon
தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.
நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெறலாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையது எலுமிச்சை.

எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும், சர்ம நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சக்காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும், வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றிக்கு உதவும்,
எலுமிச்சம் பழம் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.
விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிட்டால் உடனடி தெம்பு ஏற்படும். உண்ணாவிரம் இருந்து முடிப்போர் மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்திவிட்டு உணவு உண்டால் அஜீரணப் பிரச்சனைகள் நேர்வதைத் தடுக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில்.......
நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பாதிப்புகள் குறையும்.
நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
இரைப்பைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும். வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.
ஆளி விதை - Flax seed
நைட்டு தூங்காம டிவி பாக்குறது; செல்ஃபோன்ல கேம் விளையாடுறது, கண்களப் பத்தி கவனமில்லாம இந்தக் கால இளைஞர்கள் அஜாக்கிரதையா இருக்குறீங்க.
ஆளி விதையை பொடியாக்கி சுத்தமான தண்ணியில ஊறவைச்சா அது குழம்பாகிடும். அத வடிச்சு எடுத்து கண்ணில விட்டோம்னா கண் எரிச்சலும், கண் சிகப்பும் மாறிடும்! அப்புறம்… ஆளி விதைய தண்ணியில நல்லா ஊற வச்சு, அது உப்பின பின்னால அப்படியே எடுத்து தினமும் சாப்பிடலாம். அது ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது! ” கண் சிகப்பு, கண் அரிப்பு, கண் எரிச்சல் மாறும். ஈளை, இருமல், சிறுநீர் எரிச்சல், நீரடைப்பு, வெள்ளை தீர்க்கும்.

பெண்கள் பிரச்சனைக்கு -வைத்தியம்!
அசோக மரத்தோட பட்டையோட பசும்பாலும் தண்ணியும் சேத்து சாறெடுத்து தினமும் குடிச்சியான்னா குருதிப் போக்கு நின்னு மாதவிடாய் சுழற்சி சீராகும்.
Sunday, 18 September 2016
மணலிக்கீரை
மலச்சிக்கல் குணமாக:
- மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
ஞாபக சக்தி பெருக:
- ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:
- மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.
மூளை நரம்புகள் பலம்பெற:
- மணலிக்கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.
ஈரல் பலம்பெற:
- மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.
இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்.
Thursday, 15 September 2016
காய்கறி ஃபேஷியல்
காரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, பூசணி இவற்றை சிறுதுண்டுகள் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு 15 கழித்துக் கழுவுங்கள். முகம் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, மேடு பள்ளத்தைச் சரிசெய்யும். தோலுக்கு அதிக ஊட்டச் சத்தையும் நிறத்தையும் கொடுக்கிறது இந்த ஃபேஷியல்.
பழங்கள் ஃபேஷியல் :
வாழைப்பழ ஃபேஷியல்
செய்முறை : வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும்.
வாழைப்பழ ஃபேஷியல் செய்தால், அவை பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யவும், முகப்பருக்களைப் போக்கவும், சருமத்தை இறுக்கமடையச் செய்யவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
மாம்பழ ஃபேஷியல்
செய்முறை : மாம்பழத்தை மசித்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும்.
மாம்பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால், சருமப் பிரச்சனைகளான முதுமைத் தோற்றம் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும். சருமம் இறுக்கமடைந்து, வறட்சி நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.
ஸ்ட்ராபெர்ரி ஃபேஷியல்
செய்முறை : ஸ்ட்ராபெர்ரியை தயிருடன் சேர்த்து கலந்து, வராத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும்.
முகப்பருக்களை நீக்குவதற்கு ஸ்ட்ராபெர்ரி பெரிதும் துணையாக இருக்கும்.
ஆப்பிள் ஃபேஷியல்
செய்முறை : ஆப்பிளை அரைத்து, அதோடு தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஃபேஷியல் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
பழுப்பு நிற சருமம் மற்றும் பருக்கள் இருந்தால், அதனை சரிசெய்ய ஆப்பிள் ஃபேஷியல் சிறந்ததாக இருக்கும்.
ஆரஞ்சு ஃபேஷியல்
சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழத்தை வைத்து, ஃபேஷியல் செய்தால், வறட்சியில்லாத சருமத்தையும், இளமையான தோற்றத்தையும் பெறலாம்.
எலுமிச்சை ஃபேஷியல்
எலுமிச்சை அழகுப் பராமரிப்பில் பயன்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று. அதிலும் எலுமிச்சை ஒரு சரியான கிளின்சிங் பொருள். இதனை வைத்து முகத்திற்கு ஃபேஷியல் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பொலிவான சருமத்தைப் பெற முடியும்.
மூலிகை ஃபேஷியல் :
முல்தானிமட்டி, பயத்தமாவு, கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனத் தூள் இவற்றை சிறிது எடுத்து தேங்காய்ப் பால் விட்டு கலந்து முகத்துக்கு பேக் போடுங்கள்.
இருபது நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள். பிறகு கற்றாழை ஜெல்லில் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறுவிட்டுக் கலந்து முகத்தில் பூசிக் கழுவுங்கள்.
இப்படி தினமும் செய்துகொள்ளலாம். குளிர்கால பாதிப்பிலிருந்து முகத்தை பாதுகாக்கும். சந்தனத்தூள் முகத்தில் இருக்கும் அழுக்கை போக்கும். கஸ்தூரி மஞ்சள், முல்தானிமட்டி முகத்தை பொலிவாக்கும். தேங்காய்ப் பால் சேர்ப்பதால் சருமத்தின் மிருதுத் தன்மை கூடும். முகத்தில் பருக்கள் இருந்தால், கொஞ்சம் வேப்பந்தளிரை அரைத்துச் சேர்த்து பேக் போடலாம்.
இளநீர் ஃபேஷியல் :
சிலருக்கு 25 வயதிலேயே முகத்தில் சருமம் உலர்ந்து சுருங்கி வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும். அவர்கள், இளநீர் ஃபேஷியல் செய்துகொள்வது நல்ல பலனைத் தரும்.
இளநீரை பருத்தி பஞ்சில் தொட்டு முகத்தின் எல்லாப் பக்கமும் நன்றாக துடையுங்கள். சருமத்தைச் சுத்தமாக்கிவிடும். கடலை மாவு, மைதா மாவு இவற்றுடன் அரைத்த சந்தனம், தேன், இளநீர் கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.
வெளிப்புறத் தூசுகளால் அழுக்கு படிந்து களையிழந்து, மங்கி போன முகம் அழகாக ஜொலிக்கும்.

Tuesday, 13 September 2016
செவ்வாழை மருத்துவக்குணங்கள்
செவ்வாழை மருத்து வக்குணங்கள்
பல்வலி குணமடையும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும்
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தொற்றுநோய் தடுக்கப்படும்
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
மாலைக்கண்நோய்
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்க ு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
வாழைப்பழங்களில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.
குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.
செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு.
எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.
நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.
நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பல்வலி குணமடையும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும்
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தொற்றுநோய் தடுக்கப்படும்
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
மாலைக்கண்நோய்
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்க
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
வாழைப்பழங்களில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.
குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.
செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு.
எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.
நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.
நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உலர் திராட்சை / dry grapes
உலர் திராட்சை பழத்தில் 20 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம். உலர் திராட்சையில் உள்ள தாமிரச்சத்துக்கள் இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எனவே இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் இரத்தச்சோகை குணமாகும்.

இளநரை எட்டிப் பார்க்காது / Grey Hair
கறிவேப்பிலையை அரைத்து, சாறெடுத்து, கடலை மாவில் கரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை எட்டிப் பார்க்காது. கூந்தல் செழித்து வளரும்.
அதே போல 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வைத்து, கைப்பிடி கறிவேப்பிலை போட்டு மூடி வைக்கவும். ஆறியதும் அந்தத் தண்ணீரைக் குடித்தால் உடலிலுள்ள நச்சு நீர் வெளியேறி விடும். ஊளைச்சதை குறைந்து உடல் சிக்கென மாறும்.
Friday, 9 September 2016
Thursday, 8 September 2016
சிவ மந்திரமும்-பலன்களும்
** சிவ மந்திரமும்-பலன்களும்
* நங்சிவயநம - என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
* அங்சிவயநம - என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
* வங்சிவயநம - என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
* அங்சிவயநம - என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்.
* ஓம் அங்சிவாய - என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
* கிலி நமசிவய - என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
* ஹிரீநமசிவய - என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
* ஐயும் நமசிவய - என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
* நம சிவய - என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
* உங்யுநமசிவய - என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
* கிலியுநமசிவய - என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
* சிங்வங்நமசிவய - என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
* நமசிவயவங் - என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
* சவ்வுஞ் சிவாய - என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.
* சிங்றீங் - என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
* சிவயநம - என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
* அங்நங் சிவாய - என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
* அவ்வுஞ் சிவயநம - என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
* ஓம் நமசிவாய - என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
* லங் ஸ்ரீறியுங் நமசிவாய - என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
* ஓம் நமசிவய - என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
* ஓம் அங்உங்சிவயநம - என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
* ஓம் ஸ்ரீறியும் சிவயநம - என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
* ஓம் நமசிவய - என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
* ஓங் அங்சிவாய நம -என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

தூங்கும் முறை பற்றி - சித்தர்கள் விளக்கம்
தூங்கும் முறை பற்றி - சித்தர்கள் விளக்கம்.
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.
Tuesday, 6 September 2016
பெண்களுக்கு அழகே தலைமுடிதான்...../ Lovely hair for women
பெண்களுக்கு அழகே கருகருவென இருக்கும் தலைமுடிதான். சிலருக்கு தலைமுடி செம்பட்டை நிறத்தில் இருக்கும், அதனை ஸ்டைல் என்று நினைத்து அப்படி விட்டுவிடாதீர்கள். சத்துக்கள் குறைபாட்டினால் கூட முடியின் நிறம் மாறலாம், எனவே செம்பட்டை நிறத்தில் இருக்கும் முடியினை கருமையாக மாற்ற சில வழிகள் இதோ, என்ன செய்யலாம்?
1. ஆமணக்கு எண்ணெயினை தலையில் விட்டு நல்ல மசாஜ் செய்து பின்பு குளிக்கவும், சில மாதங்களில் செம்பட்டை நிறம் கருமையாக மாறும்.
2. தினமும் தலைக்கு குளிக்கும் முன்பு நல்ல தேங்காய்ப் பால் தேய்த்து பின்பு குளிக்கவும். நில ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் நன்றாக தலையில் ஊறிய பின்பு குளிக்கவும்.
3. தினமும் கட்டாயம் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து வரவும். ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
4. முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.
5. மரிகொழுண்டு இலையையும், செம்பருத்தி இலையையும் அரைத்து, தலைக்கு தடவி குளித்து வந்தால், செம்பட்டை முடி கறுப்பாகும்..
6. காரட்டையும் எலுமிச்சம் சாற்றையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும்.
சாத்துக்குடி
மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.
பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். கடந்த இதழில் உலர்ந்த திராட்சையின் பயன்களைக் கண்டோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.
நோயுற்றவர்களுக்கு
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.
ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.
இரத்த விருத்திக்கு
சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.
இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.
இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.
எலும்புகள் வலுவடைய
சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
நன்கு பசியைத் தூண்ட
பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.
குழந்தைகளுக்கு
ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.
பெண்களுக்கு
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.
முதியோர்களுக்கு
வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.
கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.
- See more at: http://www.mugaputhagam.in/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/#sthash.RKsvgJMp.dpufசாத்துக்குடி மருத்துவக் குணங்கள /
சாத்துக்குடி மருத்துவக் குணங்கள்:உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும். தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது. பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.குளிர்ச்சியான இனிப்பான சுவையான பழம் சாத்துக்குடி. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதிலுள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மிகுதியாகக் கொண்டுள்ளது.சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து, அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது. காய்ச்சலின் போது, வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும்.உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது.
மூட்டு வலி / joint pain relief
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.
உடல் எடை குறைய...
பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
Friday, 2 September 2016
இதுவும் உடல் நலம் / Thanks to FB Friends
பள்ளியறையில் மட்டுமல்ல
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.
மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.
அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.
நீ வழங்கும் சம தானம்.
இரவிலே தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு.
இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு.
உப்பு கறிக்கு கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே.
உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்க தவறாதே.
சின்னச் சின்ன சண்டைகள்
தினம்தோறும் போட்டுக்கொள்
சினம்கூடி பெரும்சண்டை
வந்திடாமல் பார்த்துக்கொள்.
அடிக்கடி உறவு வைத்தால்
அலுத்துமே போய்விடும்
அவ்வப்போது உறவுகொண்டால்
ஆனந்தம் பெருகிடும்.
அவள் கர்ப்பம் சுமக்கையில்
நீ அவளை சுமந்திடு.
அவள் வேலையில் அரைவாசி
உன் கையில் எடுத்திடு.
சிலநாளில் காலைவரை
அவள் அழகாய் தூங்கட்டும்
அவள் படுக்கை அறை சென்று
உன்கை தேநீர் வழங்கட்டும்
உறவது முடிந்த பின்னே
உன்பாட்டில் தூங்காதே
உன்னவள் உன் மார்பில்தூங்க
ஓரிடம் கொடுக்க தவறாதே.
தமதித்து வீடு வந்தால்
தகுந்த காரணம் சொல்.
தப்பு உன்னில் இருந்தாலே
மன்னிப்பு கேட்டுக்கொள்.
வேலைக்குச் செல்லும்போதும்
வேலைவிட்டு வந்தபோதும்
புன்னகை சேர்ந்தமுத்தத்தை
பூவையவளுக்கு போட்டுவிடு.
சிறப்பான நிகழ்ச்சி எதற்கும்
தேவி அவளை கூட்டிச்செல்
எடுப்பான பெண்ணைக் கண்டால்
எட்டி நீயும் நின்றுகொள்.
நோயிலே அவள் வீழ்ந்தால்
பாயாகி விடு.
நோவொன்று அவள் கண்டால்
தாயாகி விடு.
உன்னாலே அவள்
வடிக்கின்ற கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராய் இருக்கட்டும்.
ஆத்திரம் கூடினால்
அழுது தொலைத்துவிடு.
அவளை அடிக்கும் பழக்கமதை
அறவே வெறுத்துவிடு.
வேளை வரும் போதெல்லாம்
வெளியே அழைத்துச்செல்.
வேதனை அவள் கொள்ளாமல்
விருப்பங்களினை ஏந்திக்கொள்.
அவளொரு குற்றம் செய்தால்
அணைத்து புரியவை.
அன்னையாக நீ மாறி
அவளை திருந்தவை.
அவளின் நட்புகளை
அவள் தொடர அனுமதி.
அவளுக்கும் மனசிருப்பதை
உன் மனம்புரிந்தால் பெறுமதி.
தலை நரைக்கும் காலத்திலும்
சேர்ந்தே உறங்கிவிடு.
சாகப்போகும் நேரத்திலும்
அவள்கை பிடித்துவிடு .......
Thanks to : FB FRIENDS
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.
மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.
அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.
நீ வழங்கும் சம தானம்.
இரவிலே தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு.
இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு.
உப்பு கறிக்கு கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே.
உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்க தவறாதே.
சின்னச் சின்ன சண்டைகள்
தினம்தோறும் போட்டுக்கொள்
சினம்கூடி பெரும்சண்டை
வந்திடாமல் பார்த்துக்கொள்.
அடிக்கடி உறவு வைத்தால்
அலுத்துமே போய்விடும்
அவ்வப்போது உறவுகொண்டால்
ஆனந்தம் பெருகிடும்.
அவள் கர்ப்பம் சுமக்கையில்
நீ அவளை சுமந்திடு.
அவள் வேலையில் அரைவாசி
உன் கையில் எடுத்திடு.
சிலநாளில் காலைவரை
அவள் அழகாய் தூங்கட்டும்
அவள் படுக்கை அறை சென்று
உன்கை தேநீர் வழங்கட்டும்
உறவது முடிந்த பின்னே
உன்பாட்டில் தூங்காதே
உன்னவள் உன் மார்பில்தூங்க
ஓரிடம் கொடுக்க தவறாதே.
தமதித்து வீடு வந்தால்
தகுந்த காரணம் சொல்.
தப்பு உன்னில் இருந்தாலே
மன்னிப்பு கேட்டுக்கொள்.
வேலைக்குச் செல்லும்போதும்
வேலைவிட்டு வந்தபோதும்
புன்னகை சேர்ந்தமுத்தத்தை
பூவையவளுக்கு போட்டுவிடு.
சிறப்பான நிகழ்ச்சி எதற்கும்
தேவி அவளை கூட்டிச்செல்
எடுப்பான பெண்ணைக் கண்டால்
எட்டி நீயும் நின்றுகொள்.
நோயிலே அவள் வீழ்ந்தால்
பாயாகி விடு.
நோவொன்று அவள் கண்டால்
தாயாகி விடு.
உன்னாலே அவள்
வடிக்கின்ற கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராய் இருக்கட்டும்.
ஆத்திரம் கூடினால்
அழுது தொலைத்துவிடு.
அவளை அடிக்கும் பழக்கமதை
அறவே வெறுத்துவிடு.
வேளை வரும் போதெல்லாம்
வெளியே அழைத்துச்செல்.
வேதனை அவள் கொள்ளாமல்
விருப்பங்களினை ஏந்திக்கொள்.
அவளொரு குற்றம் செய்தால்
அணைத்து புரியவை.
அன்னையாக நீ மாறி
அவளை திருந்தவை.
அவளின் நட்புகளை
அவள் தொடர அனுமதி.
அவளுக்கும் மனசிருப்பதை
உன் மனம்புரிந்தால் பெறுமதி.
தலை நரைக்கும் காலத்திலும்
சேர்ந்தே உறங்கிவிடு.
சாகப்போகும் நேரத்திலும்
அவள்கை பிடித்துவிடு .......
Thanks to : FB FRIENDS
Thursday, 1 September 2016
பற் சொத்தை, புழுக்கள் வெளியேற....
பிரமத் தண்டின் விதையை பொடி செய்து இலையில் சுருட்டிப் பீடி குடுப்பது போல புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற் சொத்தை, புழுக்கள் வெளியேறும்.
பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.
பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.
நாவல் பழம் / Novel Fruit
நாவல் பழம் மருத்துவக் குணங்கள்
- சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.
- நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
- மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.
- பழம் அதிகம் விளையும் காலத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிட வேண்டும்.
- இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.
- பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.
- பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.
- நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.
- பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவேக் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் 3 மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாது.
Subscribe to:
Posts (Atom)