- சிலருக்கு எத்தகைய மென்மையான உணவுகளை உட்கொண்டாலும் செரிமானம் ஆகாது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் இத்தகைய தொந்தரவுகள் வருவதுண்டு. இதனால் புளித்த ஏப்பம், உருவாகும். மலச்சிக்கல், வயிற்றுப்புண், மூலநோய்கள் உண்டாகக் கூட வாய்ப்புண்டு.
- இந்த தொந்தரவு உள்ளவர்கள் எத்தகைய உணவை சமைக்கும்போதும், அதில் சிறிது அன்னாசிப் பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். குடலின் உட்புறச் சுவர்கள் பலப்படும்.
- செரிமானமின்மையால் சிலருக்கு புளித்த ஏப்பம் அடிக்கடி உண்டாகும். இவர்கள் அன்னாசிப் பூவை பொடி செய்து 1/2 கிராம் அளவு எடுத்து நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் உணவுக்குப் பின் நீருடன் சாப்பிட்டு வந்தால் புளி ஏப்பம் உண்டாகாது.
- உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் இயங்கச் செய்வது ஹார்மோன்களே. இந்த ஹார்மோன்கள் சரிவர சுரக்க செய்யும் தன்மை அன்னாசிப் பூவிற்கு உண்டு. இதனால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். எனவே அன்னாசிப் பூவை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
- அசைவ உணவு சமைக்கும்போது அதில் மறக்காமல் அன்னாசிப் பூ சேர்ப்பது நல்லது. இதனால் அசைவ உணவுகள் எளிதில் செரிமானம் ஆகும். மேலும் நல்ல சுவையுடன், நறுமணமும் கிடைக்கும்.
- அன்னாசிப் பூவின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேல்பூச்சாகப் பூசுகிறார்கள்.
Friday, 30 September 2016
அன்னாசிப் பூ / Pineapple flower
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment